Friday, February 10, 2012

ஆன்லைன் Dating செய்யணுமா?

இணையத்தில் இருக்கும் பல அன்பர்களும் புதிய நண்பர் / நண்பி கிடைக்க பல பல்டி அடித்துக் கொண்டு இருக்கிறோம் (எனக்குத் திருமணமாகி விட்டது.. So it is my past…).

முக நூலில் இலவசமாக பொக்கு கடலைகளும் பிற dating தளங்களில் காசு கொடுத்தும் கடலை போட்டு இந்த இணையக் கடலில் வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறோம் புதிய நண்பர்களை.

பல dating தளங்கள் ஏதோ உலகத்தில் உள்ள அனைத்து இளம் பெண்களும் தங்களின் தளத்தில் பதிவு செய்து புதிய ஆண் நண்பர்களுக்காகக் காத்திருப்பது போல அவர்கள் விளம்பரம் செய்வார்கள்.

உங்களின் கண்களுக்கு நம்ப வைக்கும் விதமாக ஒரு இதமான புகைப்படம்,

பெயர்: சுவேதா

வயது: 21 (10 வருசம் ஆனாலும்.. இவள் வயது 21 தான்).

நகரம்: திருச்சி

பார்க்கும் பலரும்.. அட டா .. முக்கொம்பு கூட்டி போய் மொக்கை போட ஒரு பொண்ணு கிடைச்சுடா னு ஆர்வமா அந்த தளத்தில் பதிவு செய்யும்போது தலையில் ஒரு இடிய இறக்குவர் அந்தத் தளததினர்.

“நீங்கள் clickக்கும் நபரை தொடர்பு கொள்ள $10 மதிப்பு கொண்ட கணக்கை வாங்கவும்” .

நீங்களும் உங்களின் நண்பரின் கடன் அத்தை (அட்டை) மற்றும் இணைய வங்கிக் கணக்கின் மூலம் (Net banking) பணம் செலுத்தி அந்தப் பெண்மணிக்கு

“ஹாய்.. I am a handsome software engineer looking for decent friendship” னு  ஒரு மெஸேஜ் அனுப்பினால் … பல வாரங்கள் போனாலும் பதில் வராது…

ஒரு வேலை நாம பயலுக எவனும் சட்ட்டுனு புக் பண்ணிடானோனு யோசிச்சு, அடுத்த பெண்ணிற்கும் இதேபோல் மெஸேஜ் அனுப்புவீர்கள்…

அசின்னு நீங்க நினைச்சு அனுப்பும் மெஸேஜ் எல்லாம் பிசிநில் ஒட்டி திரும்ப பதிலே வராது…

ஏன் வராது? இது போன்ற தளத்தின் உரிமையாளர்கள் எங்களை போன்ற  நிறுவனங்களிடம் பணம் கொடுத்து வடிவமைக்கச் சொல்வார்கள். தளத்தை வெளியிடும் முன்னர்.. ஒரு 1000-3000 “Fake Profiles” create  பண்ண கோடிங் எழுதச் சொல்வார்கள். நாங்களும் பல PHP coding எழுதி பல உண்மையான பெண் profiles இருப்பது போல் செய்வோம்.

இது ஆண்களை இழுக்கும் ஒரு பொதுவான யுக்தி.

முகணூலில் கூட… பெண் புகைப்படம் வைத்து, பிணாயில் குடுத்தா கூட குடிக்க ஒரு கூட்டமே இருக்கு… Facebookஇல் இருக்கும் பல பெண் profileகளும் உண்மையில் “Social Marketing” செய்யும் நிறுவனங்கள் ஏற்படுத்தும் Fake profileகளே ஆகும். அந்த நிறுவனங்கள் ஆட்டு மந்தை போல் நண்பர்களைக் கொண்டிருப்பார்கள்… இவர்களின் தொழிலே.. ஏதாவது ஒரு இணைய தளத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான “Facebook Like” கல் பெறுவது மட்டுமே….


ஆதலால்.. “இணைய ராசி அன்பர்களே… வெட்டியா நேரத்தையும் காசையும் (Your internet bill also needs money right?) வீணாக்காமா இருங்க…

0 comments:

Post a Comment