Monday, May 7, 2012

கேலக்ஸி நெக்சஸ் மற்றும் எஸ்-3 ஸ்மார்ட்போன்: ஓர் அலசல் ரிப்போர்ட்

சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து முதல் இடத்தில் இருக்கும் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள். சமீபத்தில் அறிமுகமான கேலக்ஸி எஸ்-3 மற்றும் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கே ஓர் சிறிய ஒப்பீடு.

4.65 இஞ்ச் திரை கொண்ட நெக்சஸ் ஸ்மார்ட்போன் முன்பு, கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் பிரம்மாண்டமான திரையுடன் காட்சியளிக்கிறது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் அதிக திரை கொண்டது.




ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே, ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும். கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸர் கொண்டது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அதிக தொழில் நுட்பத்தினை வழங்கும் 1.4
ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் கொண்டது.

கேமராவிலும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனை காட்டிலும், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்ப வசதியினை தான் கொண்டிருக்கிறது.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவிலும் அசத்தும். கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டுள்ளது.

ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை தான் வழங்கும். மெமரி வசதியை பொருத்த வரையில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று மாடல்களில் பெற முடியும்.

நெக்சஸ் ஸ்மார்ட்போனில் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினை பெற முடியும் என்றால், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் வசதியினையும் சேர்த்து பெற முடியும்.

மற்ற கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்களை ஒப்பிட்டு பார்க்கையில், சிறந்த படைப்பாக கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது சாம்சங்.

கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனை ரூ.30,000 விலையில் கிடைக்கும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. இதன் விலை விவரத்தினை பெற இன்னும் சற்று காத்திருக்க வேண்டி இருக்கிறது.

0 comments:

Post a Comment