ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய படைப்பை உருவாக்கி இருக்கிறது ஹுவெய் நிறுவனம். அசன்டு டி குவாட் எக்ஸ்எல் என்ற ஸ்மார்ட்போனை வழங்க உள்ளது ஹுவெய். இந்த ஸ்மார்ட்போன் 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.
இதன் 4.5 இஞ்ச் திரை மூலம் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும். லெட் ஃபிளாஷ் வசதி கொண்ட 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.
அற்புதமாக ஆடியோ மற்றும் வீடியோ வசதியினை கொடுக்கும் இந்த அசன்டு டி குவாட் எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் அளிக்கும். ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பத்தின் மூலம் இதில் பிரவுசிங் வதியையும் எளிதாக பெற்று பயனடையலாம்.
இந்த ஆண்டின் நடுவில் ஸ்மார்ட்போன் மார்கெட்டை கலக்கும் என்று எதிர் பார்க்கப்படும் இந்த அசன்டு டி குவாடு எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரியாக வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment