ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட புதிய பியஸ்ட்டா செடான் காரை போர்டு அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு தனது குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட ஆல் நியூ பியஸ்ட்டா காரை போர்டு அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆல் நியூ பியஸ்ட்டா காரின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலை இன்று போர்டு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய பியஸ்ட்டாவில் 114 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டிருக்கிறது. இதில், 6 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தரும் என்று ஏஆர்ஏஐ சான்று கூறுகிறது.
நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் அதிக மைலேஜ் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட காராக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஹில் அசிஸ்ட், குரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளும் இதில் உண்டு. இந்த புதிய பியஸ்ட்டாவின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது புதிய ஆட்டோமேட்டிக் பியஸ்ட்டா 2 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். என்ட்ரி லெவல் ஸ்டைல் வேரியண்ட் ரூ.8.99 லட்சத்திலும், டாப் வேரியண்ட் டைட்டானியம் ரூ.9.70 லட்சம் புதுடில்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.
நாடு முழுவதும் உள்ள போர்டு ஷோரூம்களில் புதிய ஆட்டோமேட்டிக் ஃபியஸ்ட்டா காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment