Friday, February 3, 2012

அடுத்த தலைமுறை அம்சங்களுடன் புதிய எலக்ட்ரிக் கார் 'ஈமோ'!

அடுத்த தலைமுறை அம்சங்களுடன் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்த ஈமோ என்ற புதிய எலக்ட்ரிக் கார் கான்செப்ட் அனைவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ரூ.10 லட்சம் என்ற மிகக்குறைந்த விலை கொண்ட எலக்ட்ரிக் காராக  விற்பனை செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரம் உலகின் ஆட்டோமொபைல் தலைநகராக வர்ணிக்கப்படுகிறது. இந்த நிலையில், அங்கு தற்போது சர்வதேச ஆட்டோ ஷோ நடந்து வருகிறது. இதில், உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளன.

இந்த கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்துள்ள சிறிய ரக எலக்ட்ரிக் கார் ஆட்டோமொபைல் வல்லுனர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஈமோ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த காரில் 4 பேர் அமர்ந்து செல்ல முடியும். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 160 கிமீ தூரமும், மணிக்கு அதிகபட்சம் 104 கிமீ வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோவி புனே, அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட், பிரிட்டனிலுள்ள கோவன்ட்ரி மற்றும் ஸ்டட்கர்ட் ஆகிய இடங்களில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சி மையத்தின் 300 எஞ்சினியர்களின் தீவிர கூட்டு முயற்சியில் இந்த கார் வடிவைக்கப்பட்டுள்ளது.



இந்த காரின் பக்கவாட்டு கதவுகள் நடுவில் மட்டும் மூடி திறக்கும் வகையிலும், நடுவில் பில்லர் இல்லாமலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், முன் மற்றும் பின் வரிசை இருக்கையில் வெகு சுலபமாக ஏறி இறங்க முடியும். மேலும், மலிவு விலையில் சர்வதேச தரத்துடன் அடுத்த தலைமுறைக்கான எலக்ட்ரிக் காரை உருவாக்கிய முதல் இந்திய நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

0 comments:

Post a Comment