Wednesday, February 1, 2012

புற்றுநோயை கண்டிறியும் ஸ்மார்ட் போன்கள்!

மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
அதாவது ஜேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில் வரையப்பட்டிருந்த பயனுள்ள வேதியல்(ஆங்கிவான்டே கெமி) எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவாறு தொடுதிரை தொழில்நுட்பத்தை(டச் ஸ்கரீன்) புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்த முடியும் என்று  கூறியுள்ளனர்.




இதற்காக தொடுதிரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், பிடிஏ மற்றும் தொடுதிரை தொழில்நுட்பத்தைக்கொண்ட ஏனைய இலத்திரனியல் சாதனங்களையும் இதற்காக பயன்படுத்தமுடியும் என்று தெரிவித்துள்ளனர். இத்தொழில்நுட்பமானது உடலிலுள்ள புரதம், டிஎன்ஏ(பரம்பரை அலகு மூலக்கூறு) என்பவற்றிலிருக்கும் இலத்திரன் ஏற்றங்களுக்கு இசைவாக  செயற்படுவதால் இவ்வாறு புற்றுநோயை கண்டறிய சாதகமாக பயன்படுத்த முடியும் என்பதில் தமக்கு 100 சதவீத நம்பிக்கை இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment