Sunday, February 5, 2012

மாரடைப்பும் தடுப்பு முறையும்! - அறியவேண்டியவை!

கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தின் வழியாக இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது. 



இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படும் இதய செயல்பாடு தடை ஏற்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது. இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கச் செய்யும்.பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில்செயலற்ற நிலையை ஏற்படுத்துகிறது.இந்த இதய செயலற்ற நிலையினையே மாரடைப்பு என்கிறோம் .

மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை ஒத்திருக்கலாம்.
பொதுவான அறிகுறிகள்
நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.
வியர்த்தல்,குமட்டல் மற்றும் மயக்கம் வருவதுபோல் உணர்தல்.
மார்பின் முன்பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம்.இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடக்கைக்கு பரவலாம்.
வாந்தி , இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.
தீவிர நிலையில், இரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம்.

மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.

நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்..
ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.
நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.
நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்.
இந்த சிகிச்சையுடன் சிறந்த மருத்துவரின் சிகிச்சைக்கு நோயாளியை உட்படுத்தல் வேண்டும்.

வாழ்க்கைமுறையில் மாற்றம்

அவர்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும்,உப்பு & கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் & நார்ச் சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் அவசியம்.
உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தல் கட்டாயம்.
புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.
நடை பயிற்சி(வாக்கிங்)செய்தல் வேண்டும்.
நீரிழிவு நோய், அதிக அளவு இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்புச்சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு,உடல்நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இருதய நோயாளிகள் உணவு வகைகள் :

சாப்பிடக்கூடியவை :

வெண்ணெய் எடுத்த மோர், தக்காளி பழரசம், கிழங்கு வகை தவிர்த்த காய்கறிகள் கூட்டு, சாம்பார், ரசம், மோர், ஆடை எ டுத்த பால், இட்லி, தோசை (எண்ணை குறைவாக விட்டு) வெண் பொங்கல், இடியாப்பம், புட்டு, ஆப்பம், ஆரஞ்சுச்சாறு, பயறுவகை (பாசிப்பயறு) சிறிதளவு மாமிசம் அல்லது கோழி, சிறிய மீன் வகைகள்.

சாப்பிடக்கூடாத உணவுகள் :

காபி, டீ, முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய்ப் பொருட்கள், மசாலா வகைகள், ஈரல், மூளை, கிட்னி, முந்திரிப் பருப்பு, பேக்கரி உணவுகள்.

இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சத்து இருப்பது மாரடைப்பிற்கு முக்கிய காரணம். ஆதலால் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை இருதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment