Sunday, February 5, 2012

ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பாடல் கேட்கும் புதிய வசதி!!! ( + படங்கள் )

நண்பர்களுடன் பேசி(chat)க்கொண்டிருக்கும் போதே, விரும்பிய பாடல்களையும் கேட்டுக்கொள்ளும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஒருவருடன் என்று மட்டுமல்லாது பல நண்பர்களுடனும் பாடல்களைக்கேட்டுக்கொண்டே சட் பண்ண முடியும். 
அனைவருக்கும் ஒரே நேரத்தில் பாடல் ஒலிப்பதனால், விருப்பத்திற்குரிய குறிப்பிட்ட "பாடல் வரிகளை"ப்பற்றிய கருத்துக்களை கூட ஒரே நேரத்தில் கலந்துரையாட முடியும்.
 
ஏற்கனவே உள்ள சட்டிங் லிஸ்ட்டுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இச்சேவையானது பாவனைக்கு மிக இலகுவாகவும், தனிமையைப்போக்கி அனைவரும் பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வைக்கொடுக்கும் என ஃபேஸ்புக் நிறுவந்தார் தெரிவித்துள்ளனர்.
 
இது எப்படி தோற்றமளிக்க உள்ளது என்பதை பின்வரும் படங்களில் பாருங்கள்.
 
 ஃபேஸ்புக்கின் இவ் வசதி கூகுள்+ இற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
 
இச்சேவையப்பெற நீங்கள் "Music App" அப்லிகேஷன்களை நிறுவ வேண்டும்.
 
தமிழ் குளோனின் பரிந்துரை அப்லிகேஷன்களை " இங்கு " நீங்கள் காணலாம்.

0 comments:

Post a Comment