English summary
கூடுதல் வசதிகளுடன் அதே விலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டாடா நானோ காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் ஏக வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய மாடல் வந்த பின் கடந்த இரு மாதங்களாக நானோ காரின் விற்பனை டாப் கியரில் செல்கிறது.
ஏராளமான புதிய அம்சங்களுடன் புதிய 2012ம் ஆண்டு மாடல் நானோ காரை கடந்த ஆண்டு நவம்பரில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. மேலும், பழைய விலையில் கூடுதல் அம்சங்கள் மற்றும் அதிக பிக்கப்புக்காக ட்யூனிங் செய்யப்பட்ட எஞ்சினுடன் வந்த நானோ தற்போது வாடிக்கையாளர்கள் வெகுவாகவே கவர்ந்துள்ளது.
புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நானோ காரின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 7,466 நானோ கார்கள் விற்பனையாகி டாடாவுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில், கடந்த மாதம் 7,723 நானோ கார்கள் விற்பனையாகியுள்ளது.
மேலும், தொலைக்காட்சி விளம்பரங்கள், சலுகைகள் ஆகியவற்றுடன் டாடாவின் தீவிர முயற்சியும் நானோ காரின் விற்பனை டாப் கியர் எடுத்ததற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.
இதனிடையே, கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் உள்நாட்டு மார்க்கெட்டில் 30,212 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருந்த டாடா மோட்டார்ஸ், கடந்த மாதம் 34,669 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
0 comments:
Post a Comment