Wednesday, January 11, 2012

A free tool to save your password

இன்றைய உலகில் மின்னஞ்சலை பன்படுத்தாக நபர்கள் யாரும் இல்லை எனலாம். ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர்.எனவே ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச்சொற்களை(Password) கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது என்பது இயலாத காரியம்.

இவ்வாறான சூழ்நிலையில் உங்களது கடவுச்சொற்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவி புரிகிறது.

இந்த மென்பொருளில் உங்களின் அனைத்து கடவுச்சொற்களையும் சேமித்து அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு கடவுச்சொல் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

எந்தவொரு நபரும் உங்களது கடவுச்சொல்லை திருடாத படி கடினமான கடவுச்சொற்களை இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.குறிப்பிட்ட ஒரு கோப்பை ஒட்டுமொத்த கடவுச்சொல்லாக தெரிவு செய்யும் வசதி.

மின்னஞ்சல், இயங்குதளம் மற்றும் இணையம் என அனைத்திற்கும் தனித்தனியான கடவுச்சொற்களை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி.போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் கணணியில் நிறுவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது.

இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தால் வரும் ZIP கோப்பை Extract செய்து Keepass என்ற கோப்பை ஓபன் செய்யுங்கள்.

அதன் பின் தோன்றும் விண்டோவில் அதில் உள்ள New என்ற பட்டனை அழுத்தவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களின் Master Password தெரிவு செய்து கொள்ளுங்கள்

அதன்பின் தோன்றும் விண்டோவில் உங்களின் கடவுச்சொல் வகையை தெரிவு செய்து கொண்டு Add Entry என்ற பட்டனை அழுத்தி உங்கள் கடவுச்சொல்லை சேமித்து கொள்ளலாம்.
இதே முறையில் உங்களையுடைய அனைத்து கடவுச்சொற்களையும் இந்த மென்பொருளில் சேமித்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த மென்பொருள் மூலம் மிக கடினமான  கடவுச்சொற்களை உருவாக்கலாம். இதற்கு Tools - Password generate சென்று கடினமான கடவுச்சொற்களை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் உருவாகும் கடவுச்சொற்கள் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.

0 comments:

Post a Comment