ஆர்இ60 என்ற பெயரில் பார்வைக்கு கொண்டு வந்த 4 வீல் பயணிகள் வாகனத்தை இந்தியாவுக்கு முன்னதாக இலங்கையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
இருசக்கர வாகன உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆட்டோரிக்ஷா தயாரிப்பிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஆர்இ60 என்ற பெயரில் தனது முதல் 4 வீல் பயணிகள் வாகனத்தை பார்வைக்கு அறிமுகம் செய்தது.
200சிசி எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய 4 வீல் ஆட்டோ ரிக்ஷாவை ரினால்ட்-நிசான் ஒத்துழைப்பில் விற்பனை செய்ய பஜாஜ் திட்டமிட்டது. ஆனால், காருக்கான லட்சணம் எதுவுமில்லாததால், இந்த 4 வீல் ஆட்டோரிக்ஷைவை அந்த நிறுவனங்கள் விற்பனை செய்ய விரும்பவில்லை.
இதனால், தனது சொந்த நெட்வொர்க்கிலேயே இந்த புதிய 4 வீல் ஆட்டோரிக்ஷாவை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஆர்இ60 4 வீல் ஆட்டோ ரிக்ஷாவை இந்தியாவுக்கு முன்னதாக இலங்கையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியதாவது:
"இலங்கையில் மாதத்துக்கு 10,000 ஆட்டோ ரிக்ஷாக்களை விற்பனை செய்து வருகிறோம். எங்களுக்கு அங்கு நல்ல டீலர் நெட்வொர்க் உள்ளது. இதனை பயன்படுத்தி ஆர்இ60 பயணிகள் வாகனத்தை முதலில் இலங்கையில் விற்பனைக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளோம்.
இதன்பின்னர், இந்தியாவில் ஆர்இ60 விற்பனைக்கு கொண்டு வரப்படும்," என்றார்.
0 comments:
Post a Comment