மைக்ரோசாப்ட் எக்சல் 2007 தொகுப்பில், Freeze panes என்ற வசதியை பற்றி பலரும் அறிந்திருந்தாலும், இது அறியாதவர்களுக்காக.
மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஒரு எக்ஸல் கோப்பை எடுத்துக் கொள்வோம். இந்த வோர்க்ஷீட்டில், 478 ஆவது Row உள்ள S. No. Particulars, Grade போன்றவற்றின் கீழாக அதற்கான விவரங்கள் இருப்பதை கவனிக்கலாம். இதில் அந்த குறிப்பிட்ட 478 வது Row வை மட்டும் Freeze செய்து, ஸ்க்ரோல் செய்யும் பொழுது, கீழே உள்ள விவரங்கள் மட்டும் ஸ்க்ரோல் ஆகும்படி செய்வதற்கான வழிமுறையை பார்க்கலாம்.
479 வது Row வை க்ளிக் செய்து, தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பிறகு மேலே உள்ள ரிப்பன் மெனுவில், View டேபை க்ளிக் செய்து அங்குள்ள, Freeze Panes ஐ க்ளிக் செய்து Freeze panes என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான். இனி ஸ்க்ரோல் செய்யும் பொழுது, அந்த குறிப்பிட்ட 478 Row மட்டும் அப்படியே திரையில் இருக்க, அதன் கீழுள்ள Row க்கள் மட்டும் ஸ்க்ரோல் ஆவதை பார்க்கலாம்.
0 comments:
Post a Comment