இணையத்தில் Facebook போன்ற தளங்களில் நாம் பணிபுரியும் பொழுது அவற்றில் உள்ள படங்களின் thumbnail மிகச் சிறியதாக இருப்பதால் அவற்றை தெளிவாக நம்மால் காண இயலுவதில்லை. இது போன்ற தளங்களில் உள்ள சிறு படங்களை முழுமையாக காண உதவும் நெருப்பு நரிக்கான நீட்சி Thumbnail-Zoom மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Add to Firefox பொத்தானை அழுத்தி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொள்ளுங்கள். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
Status bar இல் இதற்கான ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.
இந்த நீட்சி Facebook மட்டுமின்றி Twittter, Picassa, Flickr, Wikipedia போன்ற பல தளங்களில் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்ற தளங்களில் உலாவும் பொழுது, குறிப்பிட்ட Thumbnail மீது மவுசை கொண்டு செல்கையில் அந்த படங்கள் பெரிதாகவும் தெளிவாகவும் நமக்கு காண கிடைக்கிறது.
0 comments:
Post a Comment