பாஸ்டன்: வருகிற 9 ம் தேதியன்று கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கலாம் என்று உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த வைரஸ் இணையத்தை முடக்கி கணினியை செயல் இழக்கச்செய்து விடும் என்று கூறப்பட்டாலும், இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்றும், அதே சமயம் நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் ஏற்கனவே இந்த வைரஸ் இருந்தால், வரும் 9 ம் தேதி நிச்சயம் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று கூறுகிறார்கள் கம்ப்யூட்டர் நிபுணர்கள்.
டி.என்.எஸ்.(டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது, நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ். சேஞ்சர் (அலூரியன் மால்வேர்) என்ற வைரஸை உருவாக்கி இதன் மூலம் கணினியை செயல் இழக்கச் செய்யும் நாச வேலையில் வெளிநாட்டைச் சேர்ந்த 7 பேர் இறங்கினர்.
இது கடந்த ஆண்டு நவம்பரில் பரப்பி விடப்பட்டது.இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன.மேலும் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ. மாற்று சர்வரை நிறுவி உதவியது.
இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம் தேதி செயல்பட துவங்கி விடுமாம்.இதனால் உலகம் முழுவதும் பல லட்சம் கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பை கண்டறிய
டி.என்.எஸ். சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும்.பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.
எனவே கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்படாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும்.
ஆக மொத்தத்தில் ஜூலை 9 ம் தேதி கம்ப்யூட்டருக்கு எம கண்ட தினம்தான் போல!

0 comments:
Post a Comment