Friday, March 2, 2012

வீடியோ கேம் பிரியர்களுக்காகவே வரும் கிரியேட்டிவ் ஹெட்செட்!

Creative Sound
புருவத்தை உயர்த்தச் செய்யும் அளவிற்கு சூப்பரான சிறப்பம்சங்களுடன் களமிறங்குகிறது கிரியேட்டிவ் சவுண்ட் பிளாஸ்டர் டேக்டிக் 3டி அல்பா ஹெட்செட். இந்த புதிய ஹெட்செட் பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. மேலும் இந்த ஹெட்செட் எக்ஸ்பாக்ஸ் 360, பிஎஸ்3, பிசி, மேக்புக் போன்றவற்றிற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த 3டி ஹெட்செட்டின் சிறப்புகளைப் பார்த்தால் அது நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதாவது இந்த ஹெட்செட் டூவல் மோட் கொண்டுள்ளது. இதன் தொடு திரை கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. மேலும் ஆப்டிமைஸ்டு ஆடியோ செட்டிங்குகளையும் இந்த ஹெட்செட் கொண்டுள்ளது.
இந்த 3 ஹெட்செட் கேமிங் வாய்ஸ் மற்றும் எளிய தொடர்பு வசதி போன்றவற்றை வழங்குகிறது. இதன் மைக்ரோபோனைத் தனியாக பிரிக்க முடியும். அதுபோல் இது இன்லைன் ஒலி கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கிறது.

இது யுஎஸ்பி அடாப்டர், குயிக் ஸ்டார்ட் கைடு, யூசர் கைடு சாப்ட்வேர் மற்றும் இரைச்சல் தடுப்பு கன்டன்சர் போன்றவற்றையும் இந்த ஹெட்செட் வழங்குகிறது. இந்த ஹெட்செட்டின் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 20 ஹெர்ட்ஸ் முதல் 20 கிலோ ஹெர்ட்ஸ் ஆகும்.

இந்த 3டி அல்பா ஹெட்செட் வீடியோ கேம் பிரியர்களுக்கு அதிரடியான பின்னணி இசையை வழங்கும். இந்த ஹெட்செட் வடிவமைப்பில் மிகவும் அம்சமாக இருக்கிறது. மேலும் உயர்தரமான ஒலி அமைப்பிற்காக இந்த ஹெட்செட் 40மிமீ நியோடிமம் ட்ரைவர்களைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஒலி அமைப்பை மேம்படுத்த இந்த ஹெட்செட் டிஎச்எக்ஸ் ட்ரூஸ்டூடியோ ப்ரோ சாப்ட்வேர் சூட்டைக் கொண்டிருக்கிறது. ஏனெனில் இந்த டிஎச்எக்ஸ் ட்ரூஸ்டூடியோ ப்ரோ 3டி ஒலி அமைப்பை வழங்க வல்லது. ஆனால் இந்த வசதியைப் பெற வேண்டும் என்றால் இதைப் பயன்படுத்துவோர் 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டூவல் மோட் யுஎஸ்பி 2.0 அடாப்டர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த அல்பா ஹெட்செட் மிகவும் குறைவான எடையைக் கொண்டுள்ளது. இது 32 ஓம் இம்பீடன்சுடன் வருகிறது. மேலும் வீடியோ கேம் விளையாடும் போது வாய்ஸ்எப்எக்ஸ் தொழில் நுட்பம் மூலம் நமது குரைலை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த ஹெட்செட்டில் வென்ட்ரிலோ மற்றும் டீம்ஸ்பீக் போன்ற கேமிங் கம்யூனிகேசன் சாப்ட்வேர்களும் உள்ளன.

இதில் உள்ள யுஎஸ்பி அடாப்டர் மூலம் தகவல் பரிமாற்றத்தை மிக விரைவாகச் செய்யலாம். அதுபோல் இந்த டிவைஸ் கஸ்டம் க்ராபிக் ஈக்வலைசரையும் கொண்டிருக்கிறது. மேலும் பேட்டல் 1டிஒய், காம்ப்ளக்சிட்டி மற்றும் டீம் டிக்னிட்டஸ் போன்ற பிரபலமான கேமர்களின் ஆடியோ செட்டிங்குகளையும் இந்த ஹெட்செட்டில் பயன்படுத்த முடியும்.
இந்த 3டி அல்பா ஹெட்செட்டின் விலை ரூ.5,000 ஆகும்.

0 comments:

Post a Comment