This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, December 17, 2012

Free AntiVirus Download and Removal | PC Tools AntiVirus

 இணையப்பாவனை மற்றும் பென்டிரைவ் பாவனை மூலம் வைரஸ் தாக்கங்களுக்கு உள்ளாகும் கணினிகளை பாதுகாப்பதற்கென PC Tools AntiVirus எனும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளானது Antivirus மற்றும் Antispyware ஆக தொழிற்படக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.








அத்துடன் Viruses, Worms, Trojan போன்றவற்றிடமிருந்தும் மின்னஞ்சல்கள் மூலமாக பரவக்கூடிய வைரஸ் செய்நிரல்களிலிருந்தும் கணினிகளை பாதுகாக்கக்கூடியதாக காணப்படுகின்றது.மேலும் நிகழ்நேர (Real Time) பாதுகாப்பைக் தரக்கூடிய இம்மென்பொருளிற்கான Update - களும் தொடர்ச்சியாக கிடைக்கின்றன.

Tuesday, December 11, 2012

Is the world really going to end on December 21 2012?




உலகம் அழியப்போவது இல்லை இது உறுதி


எதிர் வரும் 12-21-2012 பூமி வெடித்துத் சிதறப்போவதாகவும் சிலர் பெரும் எரிகல் பூமியுடன் மோதப் போவதாகவும் அதனால் உலகில் பெரும் பாலான இடங்கள் அழியப் போவதாககும் குறிப்பிட்ட சில இடங்களே தப்பிப் பிழைக்கும் எனவும் வதந்திகளை தமது கற்பனைகளுக்கேற்ப பல ஊடகங்கள் பரப்பி வருகின்றது. இது ஊடகங்களும், சிலரும், சில விஞ்ஞானிகழும் தம்மைப் பிரபலப்படுத்துவதற்காக ஏற்படுத்திக் கொண்ட யுத்தியே.
சில ஊடகங்கள் அண்மையில் அவுஸ்திரேலிய பிரதமரே செல்லிவிட்டார் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவை எல்லாமே ஒரு விளம்பரமாகவே இவர்கள் பயன் படுத்துகின்றார்கள். இவற்றை எல்லாம் செய்தியாக வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் ஊடகங்கள் அதிகரித்து விட்டது, தமிழிலும் அதிகரித்து விட்டது பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே நாம் உறுதியாகச் சொல்கின்றோம் உலகம் அழியப் போவது இல்லை என்பதை.  இவர்களின் கணிப்பின் 12-21-12 இல் அழியும் என்கின்றார்கள் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே இந்த கட்டுரையை வாசித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். அழியும் எனும் முட்டாள்கள் அனைவரும் அழிந்து விடுவார்கள். நீங்கள் மீண்டும் 12-22-12 எமது இந்த கட்டுரையை கருத்தி இடுங்கள் இந்த முட்டாள்களின் கணிப்பின் படி அழிவில் இருந்து தப்பிய அதிஸ்ட சாலிகளாக நாங்கள் இருப்போம்.
இதை வாசித்தவர்கள் கட்டாயமா உங்கள் நண்பர்களுடன் பகிர்வதுடன் கருத்தையும் பதிவு செய்வது மட்டுமல்லாமல் 12-22-12 மீண்டும் வந்து நிங்கள் எழுதிய கருத்திற்கு ஒரு Like இட்டு நீங்களும் அழியவில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள்.



மாயன் கணிப்பு இந்த பரபரப்பிற்கு பயன்படுகின்றது. இதில் சிலர் மாயன் கணித்த கலண்டர் இரண்டாயிரத்து பன்னிரெண்டிற்கு பிறகு இல்லை என்பவர்களும், வேறு சில காரணங்களை கூறுபவர்களும், பூமியில் ஏற்பட்ட ஏற்படும் இயற்றை அனர்த்தங்களை காரணம் காட்டுபவர்களும் இந்த வதந்தியுடன் சேர்ந்து செல்கின்றனர். இது போன்றே 2000ம் ஆண்டும் உலகம் அழியப் போவதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் என்பதை பரிஸ்தமிழ்.கொம் வாசகர்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகின்றோம்.
இவர்களின் உலகம் அழியும் எனும் பரபரப்புச் செய்திகளால் பல சிறுவர்கள் மன அழவில் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் எனவும், இதே போல் இளைஞர்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் இதனால் இளைஞர்கள் தவறான செயல்களிலும் சட்ட விரோதச் செயல்களிலும் ஈடு படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே மாயன் கணிப்புப் பற்றி அவுஸ்திரேலியாவில் வாழும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆராட்சியாளரின் கருத்தை இங்கு இணைக்கின்றோம்.
எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி அன்று உலகம் அழியப் போவதாக மாயனின் அழிவுநாள் தீர்க்க தரி சனம் எடுத்துரைத்தது.
மாயன் காலண்டர் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்வென் குரேனெமெயல்(Sven Gronemeyer) என்பவர், இந்தத் தீர்க்க தரிசனம் 1300 ஆண்டு களுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்படுகிறது. ஆனால் இதை அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று விளக்கம் தருகிறார்.
இவர் ஒரு ஜேர்மானியர், அவுஸ்திரேலியாவில் உள்ள லாட்ரோபே பல்கலைக்கழகத்தில் மத்திய அமெரிக்க நாகரிகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர் மாயன் காலண்டர் குறித்து கூறுகையில், இந்தக்கல்வெட்டு ஹீரோகிளிஃபிக்ஸ்(hieroglyphs) என்ற எழுத்துக்களால் ஆனது. இதில் மாயனின் கடவுளான போலோன் யோக்தேயின் (Bolon Yokte ) வருகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
படைப்பின் கடவுளான போலோன் யோக்தே போர்க்கடவுளாகவும் இருப்பதால் அவரது வருகையால் உலகம் அழியும், அவரை வரவேற்க அவரது பக்தர்கள் தயாராக வேண்டும் என்பது தான் இந்தக் கல்வெட்டின் வாசகங்கள் தரும் கருத்தாகும் என்றார்.
மேலும் தெரிவிக்கையில், இந்தக் கல்வெட்டில் மாயன் கடவுளின் வருகை தினம் தரப்பட்டுள்ள நிலையில், இதனை 21.12.2012 திகதி என்று உறுதியாக குறிப்பிட இயலாது.
இதை கடவுளைப் பற்றிய தகவலாக அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, மனிதக்குலத்தின் அழிவு பற்றிய முன்னறிவிப்பாக இக்கல் வெட்டைக் கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
என்ன வாசகர்களே நாம் 12-21-12 உலகம் அழியாது என்பதை உறுதியாக கூறுகின்றோம். இதை ஒப்புக்கொள்பவர்கள் கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள் நாங்கள் மீண்டும் 12-22-12 இன் சந்திப்போம் என்ற உறுதியுடன். மறந்து விடாமல் மீண்டும் இந்த பகுதிக்கு வருகை தந்து 12-22-12 Like செய்து உலகம் அழியும் எனும் வதந்தியை நம்பாதவர்கள். நடக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நன்றி

Tuesday, December 4, 2012

Nissan Releases All-New Sylphy Price in Chennai

நிஸான் ஸில்ஃபி இன்று முதல் ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது! - கூடிய விரைவில் நம் நாட்டிலும்!


Nissan Releases All-New Sylphy, which goes on sale today at Nissan dealers throughout Japan!

நிஸான் ஸில்ஃபி செடான் அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் தாய்லாந்து உட்பட 120 நாடுகளில் விற்கப்படும். இது ஒரு குளோபல் கார் என்பதால் கூடிய விரைவில்(டீசல் இன்ஜின் தயாரானவுடன்) இந்தியாவில் விற்பனைக்கு வரும். ஜப்பானில் இதன் விலை 1,937,250 yen முதல் 2,389,800 yen வரை. இது ஒரு டி-செக்மென்ட் கார். அதாவது கரோலா, ஃப்ளூயன்ஸ், லாரா, ஜெட்டா மற்றும் க்ரூஸ் போன்ற கார்களோடு போட்டி போடும்!



Coutesy - motor vikatan

Monday, December 3, 2012

ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம்

உலகில் பெரும்பாலான நபர்கள் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.மின்னஞ்சல் அனுப்புவது மற்றும் பெறுவது மட்டும் அல்லாமல், கோப்புகளையும் இணைத்து அனுப்புவர். இதுவரையிலும் 25 MB அளவு கொண்ட கோப்புகளை மட்டுமே அனுப்ப முடிந்தது.


ஆனால் இனிமேல் 10 GB வரையிலான கோப்புகளை அனுப்பலாம் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த புதிய வசதிக்காக ஜிமெயிலோடு Google Drive-வை இணைத்துள்ளது.

இதனால் Drive மூலம் நேரடியாக கோப்புகளை இணைத்து ஜிமெயில் மூலம் அனுப்ப முடியும். இந்த வசதியை பெற ஜிமெயில் உறுப்பினர்கள், ஜிமெயிலின் அப்டேட் பதிப்பை பயன்படுத்த வேண்டும்.

மேலும் கோப்புகளை அனுப்பும் போது ஜிமெயில் அவற்றை மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யும் என்று கூகுளின் தயாரிப்பு மேலாளர் பில் ஷார்ப் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன்பாக ஜிமெயிலில் உள்ள  Drive icon-யை கிளிக் செய்து, கோப்புகளை இணைத்து அனுப்ப வேண்டும்.

Saturday, November 24, 2012

அடையாள அட்டை கட்டாயம்!

டிசம்பர் 1–ந் தேதி முதல் ரயில்களில் அனைத்து முன்பதிவு பயணத்திற்கும் அடையாள அட்டை அவசியம் அமலாகிறது.



முன்பதிவு பயணிகள் தங்கள் பயணத்தின் போது கீழ்க்கண்ட புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும்.

1. வருமானவரித்துறை வழங்கும் பான் கார்டு.
2. ஓட்டுனர் உரிமம்.
3. மத்திய, மாநில அரசுகள் வரிசை எண்ணுடன் வழங்கிய அடையாள அட்டை.
4. வங்கிக்கடன் அட்டை.
5. வாக்காளர் அடையாள அட்டை.
6. வங்கி பாஸ் புக்.
7. பாஸ்போர்ட்.
8. அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை.
9. ‘ஆதார்’ அடையாள அட்டை.
10. மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், மாவட்ட, நகர, பஞ்சாயத்து நிர்வாகம் வரிசை எண்ணுடன் வழங்கும் அடையாள அட்டை.

How Aeroplane Fly ?

விமானம் பறப்பது எப்படி?




இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது

எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது.





விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது

Thursday, October 25, 2012

உடம்பு ஏன் அதிக களைப்பா இருக்குன்னு தெரியுமா?




அந்த காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன், எளிதில் களைப்பு அடையாமல் இருப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் களைப்பைத் தான் எளிதில் அடைய முடிகிறது. மேலும் எவ்வளவு தான் முக்கிய வேலையாக இருந்தாலும், அந்த வேலை செய்ய எண்ணம் இல்லாமல் தூங்க வேண்டும் என்றே எப்போதும் தோன்றும். இதற்கு காரணம் நமது வாழ்க்கை முறை தான்.

உடலில் அதிக களைப்பு இருந்தால், உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அதாவது வாந்தி, தலை வலி போன்றவை. மேலும் அதே சமயம் அந்த களைப்பு பலவித நோய்களுக்கும் அறிகுறியாக உள்ளது. உதாரணமாக, உடலில் தைராய்டு, எய்ட்ஸ், அனீமியா போன்ற நோய்களுக்கு உடல் களைப்பு ஒரு அறிகுறி.

மேலும் அதிக வேலையின் காரணமாக மனஅழுத்தம் இருந்தாலும், உடல் மிகுந்த சோர்வடைந்துவிடும். சரியான உணவு பழக்கம் இல்லாதது, நாள்பட்ட வலி போன்றவையும் உடல் சோர்வுக்கு காரணங்களாகும். ஆகவே இவற்றை சரிசெய்ய வேண்டுமென்றால், நாம் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ வேண்டும். இப்போது எந்த செயல்கள் உடலில் களைப்பை அதிகமாக ஏற்படுத்துகின்றன என்று பார்ப்போமா!!!

தூக்கம்- சரியாக தூங்காமல் இருந்ததால் உடலில் சோர்வு ஏற்படும். அதிலும் உடலுக்கு குறைந்தது 6-8 மணிநேர ஓய்வானது தேவைப்படுகிறது. அவ்வாறு சரியான ஓய்வு உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் உடல் சோர்வு ஏற்படும்.

நோய்கள்- எப்போது பார்த்தாலும் உடல் களைப்புடன் இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்று இருந்தால், அது உடலில் ஏற்படும் நோயான அனீமியா, தைராய்டு போன்றவற்றிற்கு அறிகுறியாகும்.

வாழ்க்கை முறை- இன்றைய மார்டன் உலகில், வேலைக்கு சென்றால், குறைந்தது 8-9 மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. மேலும் அலுவலகம் நீண்ட தூரத்தில் இருப்பதாலோ அல்லது வேறு ஏதாவது வேலைக்காவோ, பயணம் செய்யும் நிலை உள்ளது. ஆகவே உடல் பலமிழந்து சோர்வடைகிறது.

மனநிலை- ஒருவர் அதிக மன அழுத்ததுடனோ அல்லது மன இறுக்கத்துடனோ இருந்தால், அவையும் உடலை அதிக அளவில் களைப்படையச் செய்கின்றன.

உணவு- உடல் ஆரோக்கியத்துடன் இருக்க போதுமான அளவு ஆரோக்கியமான உணவானது உடலுக்கு தேவைப்படுகிறது. ஆனால் நிறைய பேர் உடல் எடையை குறைக்க, உடலை பிட்டாக வைப்பதற்கு என்று நிறைய ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை அதிகம் சேர்க்கின்றனர். இதனால் உடல் விரைவில் களைப்படைகிறது.

உடல் பருமன்- ஒல்லியாக இருப்பவர்களை விட குண்டாக இருப்பவர்களின் உடல் விரைவில் களைப்படைந்துவிடும். ஆகவே அதிக உடல் எடையும் களைப்படைவதற்கு ஒரு காரணம்.
எனவே நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு, உடலுக்கு தேவையான ஓய்வை கொடுத்து, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.

Friday, October 19, 2012

ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் சாஃப்ட்வேர் அப்டேஷன்

நோக்கியா நிறுவனம் லுமியா 800 மற்றும் லுமியா 710 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய சாஃப்ட்வேர் அப்டேஷன் வசதியினை வழங்குகிறது. இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம், ஒரே நேரத்தில் 5 மின்னணு சாதனங்களில் 3ஜி வசதியினை பெறலாம் என்பது தான் இதன் சிறப்பு. ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்ப சாதனங்களை இணைக்க வேண்டும் என்றால் அதற்கு ரூட்டர் கருவி தேவைப்படுகிறது.



ஆனால் நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம் நான்கு, ஐந்து மின்னணு சாதனங்களிலும் எளிதாக ஒரே நேரத்தில் 3ஜி வசதியை பயன்படுத்தலாம். நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தனது வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறது. சமீபமாக நோக்கியா நிறுவனம் பல சரிவுகளை சந்தித்து வந்தாலும் கூட, ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக கால் பதிக்க முயற்சித்து கொண்டு வருகிறது என்பதற்கு, நோக்கியா வழங்கும் இந்த அப்டேஷன் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்.

உங்களுக்கு நீங்களே டாக்டர்!





‘உணவே மருந்து’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘மருந்தே உணவு’ என்ற இன்றைய நிலையையும் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். இங்கே நாம் பேசப் போவது ‘உடலே மருந்து’ என்பதை!

‘‘உடல் எங்கேயாவது மருந்தாக செயல்படுமா? அதை என்ன கரைத்தா குடிக்க முடியும்?’’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உடம்பைக் கரைத்துக் குடிக்க முடியாதுதான். நம்மால் மட்டுமல்ல... எந்த நோயாலும் நம் உடலையும் கரைத்துக் குடித்துவிட முடியாது. அந்த நோயை ஓட ஓட விரட்டியடிக்கும் சக்தி நம் உடலுக்குள்ளேயே மறைந்திருக்கிறது. ஆஞ்சநேயர் போல தன் பலத்தை தானே அறியாமல் சோர்ந்திருக்கும் நம் உடலுக்கு அதன் பலத்தை நினைவுபடுத்த வேண்டியதுதான் நம் வேலை. மற்றவற்றை இயற்கையே பார்த்துக் கொள்ளும். இந்த புதுமை சிகிச்சைக்கு டாக்டரும் தேவையில்லை; மணிக்கணக்கில் காத்திருக்கவும் தேவையில்லை; பணமும் செலவழிக்கத் தேவையில்லை! உங்களுக்கு நீங்களே டாக்டர்...

அந்தக் காலத்தில் இன்றிருப்பது போல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் ஏது... மெடிக்கல் இன்ஷூரன்ஸ் ஏது? தலைவலி, காய்ச்சல் என்றால், இஞ்சியையும் சுக்கையும் தட்டி வெந்நீரில் போட்டுக் குடித்து நிவாரணம் கண்டவர்கள் நம் முன்னோர். இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் என ஒன்றையும் விடவில்லை அவர்கள். தான் படைத்த எல்லாப் பொருளிலும் ஏதோவொரு மருந்தை மனிதனுக்காக வைத்திருந்தது இயற்கை. அந்த மருந்துகளுக்கெல்லாம் மாமருந்தை மனிதனின் உடலுக்குள் வைத்திருந்தது. அதைத்தான் இந்தத் தொடரில் நாம் தரிசிக்கப் போகிறோம்.

சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப் பாருங்கள். அவர் அப்படி இயங்குவது நல்ல ஆரோக்கியத்தையே காட்டுகிறது. அந்த ஆரோக்கியம் உடலினுடையதா; அல்லது அதன் ஒரு பகுதியான மூளையினுடையதா? பிரித்தறியக் கஷ்டமாக இருக்கிறதா? உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மூளை மந்தமாக இருக்காது. மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தால் உடலின் பொலிவு மற்றும் இயக்கத்திலிருந்தே அதைக் கண்டு கொள்ளலாம். இந்தத் தொடர்பில்தான் அடங்கியிருக்கிறது உடல் மருந்தாவதன் ரகசியம்.

தொடர்பு என வருகிறபோது இருதரப்பை இணைக்கிற ஒரு கருவி அங்கு முக்கியமாகிறது. நம்புங்கள்... நமது மூளையும் உடலின் மற்ற பாகங்களும் தோலின் வெளிப்பகுதிகளில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் விரவியிருக்கும் சிறுசிறு புள்ளிகள் மூலம்தான் பரஸ்பரம் உறவைக் கொண்டுள்ளன. ‘அக்கு புள்ளிகள்’ என அழைக்கப்படுகின்றன அந்தப் புள்ளிகள். ‘எண்சாண் உடம்புக்கு தோல் அரண்’ என்றால் அந்த பார்டரில் நின்றபடி உடம்பைக் காக்கும் சிப்பாய்கள் இந்தப் புள்ளிகள். உள்ளங்கை, பாதம், காது மடல்களில் அதிகமாகவும், மற்ற பகுதிகளில் பரவலாகவும் காணப்படுகிற இந்த அக்கு புள்ளிகள் நம் உடலில் சுமார் 900க்கு மேல் உள்ளன. ‘இந்தப் புள்ளிகளால் எந்த நோயையும் விரட்டலாம்’ என்பது நிரூபிக்கப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது.

‘அக்கு’ என்ற வார்த்தையைக் கேட்டாலே, ‘ஊசியை வச்சுக் குத்துவாங்களே... அந்தச் சீன வைத்தியமா’ என்கிறார்கள் இங்கு. அக்கு புள்ளிகளை மெல்லிய ஊசிகளால் தூண்டி நோய்களுக்குத் தீர்வு காண்பது ‘அக்குபஞ்சர்’; ஊசிகளுக்குப் பதில் விரல்களைப் பயன்படுத்துவது ‘அக்குபிரஷர்’. இதெல்லாமே சீனாவின் கண்டுபிடிப்பு என்றே நம்மவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை இங்கேயிருந்து - குறிப்பாக தமிழ் மண்ணிலிருந்துதான் - அங்கே போயிருக்கிறது. ‘ஏழாம் அறிவு’ படம் நினைவுக்கு வருகிறதா?

தமிழ் மரபின் 18 சித்தர்களில் போகர் பிரபலமானவர். முருகனுக்கு ஆலயம் எழுப்ப நினைத்த அவர், உயர்ந்த ரக சீனக் களிமண்ணுக்காக அங்கு சென்றிருக்கிறார். அந்தச் சமயம் அங்கு இனம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு மக்கள் இறந்திருக்கிறார்கள். தனக்குத் தெரிந்த பொன்னூசி வைத்திய முறையில் அவர்களில் சிலரைக் குணப்படுத்தியிருக்கிறார் அவர். இந்த சிகிச்சையில் கிடைத்த அற்புத நிவாரணம், சீனர்களை அதிசயிக்க வைத்தது. தங்களுக்கும் அதைச் சொல்லித் தரக் கேட்டிருக்கிறார்கள். போகரும் சொல்லித் தந்தார். அதைத் தொடர்ந்து பயன்படுத்தி, உலக அரங்கில் அதைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள்.

இன்றைய நிலவரப்படி சீன மக்களில் 70 சதவீதம் பேர் எந்த நோய்க்கும் அக்கு சிகிச்சையே எடுக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் உலகின் பல நாடுகளில் இன்று இந்த சிகிச்சை பலருக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது. வரலாறுகளை அலட்சியப்படுத்தும் குணமுள்ள நாம், ‘இப்ப அதனால என்ன’ என்கிற கேள்வியைக் கேட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டோம்.

சரி! விஷயத்துக்கு வருவோம்... தோல் என்னும் போர்வையில் பரந்திருக்கும் அக்கு புள்ளிகளை வெறும் விரல்களால் தூண்டி விட்டு நோயைக் குணப்படுத்தும் ‘அக்குபிரஷர்’ சிகிச்சை பற்றித்தான் வரும் வாரங்களில் பார்க்கப் போகிறோம். இதுவும் ‘தொடுவர்மம்’ என்ற பெயரில் இங்கிருந்து கிளம்பியதுதான். எந்தப் பிரச்னையும் அக்கு புள்ளிகளுக்கு பிடிபடாமல் போவதில்லை. ‘விரல்களால் அழுத்தி எப்படி நோயைச் சரிசெய்ய முடியும்’ என்பது சிலருக்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். பெண்கள் கம்மல், மெட்டி போடுவதெல்லாம் ஒரு அழுத்தத்துக்காகவே என்ற உண்மையைச் சொன்னால், இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா தெரியாது! ஒரே அலுப்பாக இருக்கிறதென்று வீட்டில் மனைவியைக் கால் அமுக்கி விடச் சொல்கிறவர்கள், ஐந்து நிமிடம் நிம்மதியாகத் தூங்குவது எப்படி? இதெல்லாம் அக்குபிரஷருக்கு சிம்பிள் உதாரணங்கள். 

உடனே, அக்குபிரஷர் ஸ்பெஷலிஸ்டைப் பார்க்கக் கிளம்பி விடாதீர்கள். இந்த சிகிச்சை ஒரு ‘விலையில்லா மருத்துவம்’. சில ஆரம்ப கட்ட அமர்வுகளுக்குப் பிறகு, வரும் முன் காப்பது, நோயைக் கண்டறிவது, முற்றிலும் குணப்படுத்துவது... எல்லாமும் நீங்களேதான்! அதாவது, நோயாளியான நீங்கள்தான் டாக்டரும்! ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த ஆர்வத்துடனேயே தயாராகுங்கள்.
பிரதி எடுக்க
எழுத்தின் அளவு
 0 0 New [Pin It]
மேலும் செய்திகள்

    கரிப்பான் இலையின் மருத்துவக் குணங்கள்
    நெல்லிக்காய் சாப்பிடுங்க இளமையா இருங்க
    பப்பாளியின் பயன்கள்
    மாதுளையின் மகத்துவம்
    கறிவேப்பிலையின் மருத்துவப்பயன்
    கண்களில் ஏற்படும் சிவப்புக்களை போக்கும் ஆமணக்கு
    ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு
    மருந்தாகும் மூலிகைகள்
    மருத்துவ பயன் நிறைந்த வெந்தயம்
    வேலிப்பருத்தியின் மருத்துவ குணம்
    எண்ணெய் வித்தாகும் ஆமணக்கு
    மன இறுக்கத்தை போக்கும் வாழைப்பழம்
    வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்
    நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்
    ஆமணக்கின் மருத்துவ குணங்கள்


‘உணவே மருந்து’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘மருந்தே உணவு’ என்ற இன்றைய நிலையையும் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். இங்கே நாம் பேசப் போவது ‘உடலே மருந்து’ என்பதை!

‘‘உடல் எங்கேயாவது மருந்தாக செயல்படுமா? அதை என்ன கரைத்தா குடிக்க முடியும்?’’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உடம்பைக் கரைத்துக் குடிக்க முடியாதுதான். நம்மால் மட்டுமல்ல... எந்த நோயாலும் நம் உடலையும் கரைத்துக் குடித்துவிட முடியாது. அந்த நோயை ஓட ஓட விரட்டியடிக்கும் சக்தி நம் உடலுக்குள்ளேயே மறைந்திருக்கிறது. ஆஞ்சநேயர் போல தன் பலத்தை தானே அறியாமல் சோர்ந்திருக்கும் நம் உடலுக்கு அதன் பலத்தை நினைவுபடுத்த வேண்டியதுதான் நம் வேலை. மற்றவற்றை இயற்கையே பார்த்துக் கொள்ளும். இந்த புதுமை சிகிச்சைக்கு டாக்டரும் தேவையில்லை; மணிக்கணக்கில் காத்திருக்கவும் தேவையில்லை; பணமும் செலவழிக்கத் தேவையில்லை! உங்களுக்கு நீங்களே டாக்டர்...

அந்தக் காலத்தில் இன்றிருப்பது போல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் ஏது... மெடிக்கல் இன்ஷூரன்ஸ் ஏது? தலைவலி, காய்ச்சல் என்றால், இஞ்சியையும் சுக்கையும் தட்டி வெந்நீரில் போட்டுக் குடித்து நிவாரணம் கண்டவர்கள் நம் முன்னோர். இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் என ஒன்றையும் விடவில்லை அவர்கள். தான் படைத்த எல்லாப் பொருளிலும் ஏதோவொரு மருந்தை மனிதனுக்காக வைத்திருந்தது இயற்கை. அந்த மருந்துகளுக்கெல்லாம் மாமருந்தை மனிதனின் உடலுக்குள் வைத்திருந்தது. அதைத்தான் இந்தத் தொடரில் நாம் தரிசிக்கப் போகிறோம்.

சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப் பாருங்கள். அவர் அப்படி இயங்குவது நல்ல ஆரோக்கியத்தையே காட்டுகிறது. அந்த ஆரோக்கியம் உடலினுடையதா; அல்லது அதன் ஒரு பகுதியான மூளையினுடையதா? பிரித்தறியக் கஷ்டமாக இருக்கிறதா? உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மூளை மந்தமாக இருக்காது. மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தால் உடலின் பொலிவு மற்றும் இயக்கத்திலிருந்தே அதைக் கண்டு கொள்ளலாம். இந்தத் தொடர்பில்தான் அடங்கியிருக்கிறது உடல் மருந்தாவதன் ரகசியம்.

தொடர்பு என வருகிறபோது இருதரப்பை இணைக்கிற ஒரு கருவி அங்கு முக்கியமாகிறது. நம்புங்கள்... நமது மூளையும் உடலின் மற்ற பாகங்களும் தோலின் வெளிப்பகுதிகளில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் விரவியிருக்கும் சிறுசிறு புள்ளிகள் மூலம்தான் பரஸ்பரம் உறவைக் கொண்டுள்ளன. ‘அக்கு புள்ளிகள்’ என அழைக்கப்படுகின்றன அந்தப் புள்ளிகள். ‘எண்சாண் உடம்புக்கு தோல் அரண்’ என்றால் அந்த பார்டரில் நின்றபடி உடம்பைக் காக்கும் சிப்பாய்கள் இந்தப் புள்ளிகள். உள்ளங்கை, பாதம், காது மடல்களில் அதிகமாகவும், மற்ற பகுதிகளில் பரவலாகவும் காணப்படுகிற இந்த அக்கு புள்ளிகள் நம் உடலில் சுமார் 900க்கு மேல் உள்ளன. ‘இந்தப் புள்ளிகளால் எந்த நோயையும் விரட்டலாம்’ என்பது நிரூபிக்கப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது.

‘அக்கு’ என்ற வார்த்தையைக் கேட்டாலே, ‘ஊசியை வச்சுக் குத்துவாங்களே... அந்தச் சீன வைத்தியமா’ என்கிறார்கள் இங்கு. அக்கு புள்ளிகளை மெல்லிய ஊசிகளால் தூண்டி நோய்களுக்குத் தீர்வு காண்பது ‘அக்குபஞ்சர்’; ஊசிகளுக்குப் பதில் விரல்களைப் பயன்படுத்துவது ‘அக்குபிரஷர்’. இதெல்லாமே சீனாவின் கண்டுபிடிப்பு என்றே நம்மவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை இங்கேயிருந்து - குறிப்பாக தமிழ் மண்ணிலிருந்துதான் - அங்கே போயிருக்கிறது. ‘ஏழாம் அறிவு’ படம் நினைவுக்கு வருகிறதா?

தமிழ் மரபின் 18 சித்தர்களில் போகர் பிரபலமானவர். முருகனுக்கு ஆலயம் எழுப்ப நினைத்த அவர், உயர்ந்த ரக சீனக் களிமண்ணுக்காக அங்கு சென்றிருக்கிறார். அந்தச் சமயம் அங்கு இனம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு மக்கள் இறந்திருக்கிறார்கள். தனக்குத் தெரிந்த பொன்னூசி வைத்திய முறையில் அவர்களில் சிலரைக் குணப்படுத்தியிருக்கிறார் அவர். இந்த சிகிச்சையில் கிடைத்த அற்புத நிவாரணம், சீனர்களை அதிசயிக்க வைத்தது. தங்களுக்கும் அதைச் சொல்லித் தரக் கேட்டிருக்கிறார்கள். போகரும் சொல்லித் தந்தார். அதைத் தொடர்ந்து பயன்படுத்தி, உலக அரங்கில் அதைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள்.

இன்றைய நிலவரப்படி சீன மக்களில் 70 சதவீதம் பேர் எந்த நோய்க்கும் அக்கு சிகிச்சையே எடுக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் உலகின் பல நாடுகளில் இன்று இந்த சிகிச்சை பலருக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது. வரலாறுகளை அலட்சியப்படுத்தும் குணமுள்ள நாம், ‘இப்ப அதனால என்ன’ என்கிற கேள்வியைக் கேட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டோம்.

சரி! விஷயத்துக்கு வருவோம்... தோல் என்னும் போர்வையில் பரந்திருக்கும் அக்கு புள்ளிகளை வெறும் விரல்களால் தூண்டி விட்டு நோயைக் குணப்படுத்தும் ‘அக்குபிரஷர்’ சிகிச்சை பற்றித்தான் வரும் வாரங்களில் பார்க்கப் போகிறோம். இதுவும் ‘தொடுவர்மம்’ என்ற பெயரில் இங்கிருந்து கிளம்பியதுதான். எந்தப் பிரச்னையும் அக்கு புள்ளிகளுக்கு பிடிபடாமல் போவதில்லை. ‘விரல்களால் அழுத்தி எப்படி நோயைச் சரிசெய்ய முடியும்’ என்பது சிலருக்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். பெண்கள் கம்மல், மெட்டி போடுவதெல்லாம் ஒரு அழுத்தத்துக்காகவே என்ற உண்மையைச் சொன்னால், இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா தெரியாது! ஒரே அலுப்பாக இருக்கிறதென்று வீட்டில் மனைவியைக் கால் அமுக்கி விடச் சொல்கிறவர்கள், ஐந்து நிமிடம் நிம்மதியாகத் தூங்குவது எப்படி? இதெல்லாம் அக்குபிரஷருக்கு சிம்பிள் உதாரணங்கள். 

உடனே, அக்குபிரஷர் ஸ்பெஷலிஸ்டைப் பார்க்கக் கிளம்பி விடாதீர்கள். இந்த சிகிச்சை ஒரு ‘விலையில்லா மருத்துவம்’. சில ஆரம்ப கட்ட அமர்வுகளுக்குப் பிறகு, வரும் முன் காப்பது, நோயைக் கண்டறிவது, முற்றிலும் குணப்படுத்துவது... எல்லாமும் நீங்களேதான்! அதாவது, நோயாளியான நீங்கள்தான் டாக்டரும்! ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த ஆர்வத்துடனேயே தயாராகுங்கள்.

Courtesy : Dinakaran

Wednesday, August 22, 2012

விண்டோஸ் வேகமாக இயங்க



விண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுதான்.

தேவையற்றவற்றை இன்ஸ்டால் செய்து வைப்பது, அழிக்க வேண்டிய பெரிய அளவிலான பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் தேங்கவிடுவது, பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்து, இயக்கிப் பின்னணியில் பயன்படுத்தாமல் வைத்திருப்பது என நாம் செய்திடும் பல கம்ப்யூட்டர் பாவச் செயல்களைச் செய்திடலாம்.

இன்னும் இது போல நாம் தவறான பல வழிகளை மேற்கொள்கிறோமா என்று சிந்தனை செய்தால், பட்டியல் நீளும். அதற்குப் பதிலாக நாம் செய்ய வேண்டியது என்ன என்று எண்ணி, அவற்றில் சில இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளன.

1. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.

2. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும்.

இவற்றை சி கிளீனர் (CCleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.

3. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை http://www.techrecipes.com /rx/1353 /xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.

4. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.

5. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.

6. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

7. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.

8. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.

9. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.

10. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாகவும் ராம் மெமரி பயன்படுத்துவது பாவம். இதனை அதிகரிக்கலாமே!

Friday, July 13, 2012

மதுரையில் இன்று முதல், "ஏர் இந்தியா' சேவை : கொச்சி வழியாக வெளிநாடுகளுக்கு பறக்கலாம்

மதுரை : மதுரை - கொச்சி இடையே, விமான சேவையை, "ஏர் இந்தியா' இன்று முதல் தொடங்குகிறது. மதுரை டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா கூறியதாவது: மதுரை விமான நிலையத்தில், வெளிநாட்டு விமான சேவை தொடங்கவில்லை. "கஸ்டம்ஸ்' ஒப்புதல் கிடைத்த நிலையில், "இமிகிரேஷன்' ஒப்புதல் தாமதமாகி வருகிறது. டிராவல் கிளப் சார்பில், கடந்த ஆண்டு, மலேசியா நிறுவனத்திடம் பேச்சு நடத்தினோம். அவர்களும் பார்வையிட்டு சென்றனர். 

ஆனால், 150 கி.மீ.,ல், திருச்சி சர்வதேச விமான நிலையம் இருப்பதால், வர்த்தகம் பாதிக்கும் என கருதினர். கடந்த டிசம்பரில், மதுரையில் நடந்த கூட்டத்தில், ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. மதுரையை மையமாக வைத்து, ஒன்பது மாவட்டங்கள் பயன்பெறும் கோரிக்கையை முன்வைத்தோம். மதுரையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதன்மை அதிகாரி பங்கேற்ற கூட்டத்தில், இதற்கு பலன் கிடைத்தது. மதுரை - கொழும்பு விமான சேவைக்கு, "மிகின் லங்கா' முன்வந்துள்ளது. அந்நாட்டு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்திய அரசின் அனுமதி பரிசீலனையில் உள்ளது. நவம்பரில், "வின்டர்' சேவையாக, "மிகின் லங்கா' பயணத்தை தொடங்கும். இதற்கிடையில், மதுரை - கொச்சின் விமான சேவைக்கு, ஏர் இந்தியா முன்வந்துள்ளது.

இன்று முதல், திங்கள், புதன், வெள்ளியில், விமான சேவை இருக்கும். கொச்சியிலிருந்து மதியம் 3.30 மணிக்கு (எண் ஏ.ஐ., 9503), மதுரையிலிருந்து 4.15 மணிக்கு (எண் ஏ.ஐ., 9504) புறப்படும். இது ஒரு, ஏ.டி.ஆர்., ரக விமானம். இதில், 48 பேர் பயணிக்கலாம். இந்த விமானத்தில் சென்று, கொச்சியில் இருந்து ஜெட் ஏர்வேஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், குவைத் ஏர்வேஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, கல்ப் ஏர், டைகர் ஏர்வேஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில், வெளிநாடுகளுக்கு பயணிக்கலாம். அறிமுக சலுகையாக, ஆக., 31 வரை, 1,387 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். முன்னாள் தலைவர்கள் வாசுதேவன், ஸ்ரீராம் உடனிருந்தனர். தயாராகுது "ஹெலி பேட்' : மதுரையிலிருந்து, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், காரைக்குடிக்கு, "ஹெலிகாப்டர் சேவை' வழங்கவும், ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக, அந்த பகுதிகளில், "ஹெலி பேட்' அமைக்க உள்ளனர். மதுரை நகரை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதியும், அதில் இருக்கும்.

Saturday, July 7, 2012

ஜூலை 9 ல் கம்ப்யூட்டருக்கு எம கண்டம்; வைரஸ் தாக்கலாம் என எச்சரிக்கை!

பாஸ்டன்: வருகிற 9 ம் தேதியன்று கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கலாம் என்று  உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த வைரஸ் இணையத்தை முடக்கி கணினியை செயல் இழக்கச்செய்து விடும் என்று  கூறப்பட்டாலும், இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்றும்,  அதே சமயம் நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் ஏற்கனவே இந்த வைரஸ் இருந்தால்,  வரும் 9 ம் தேதி நிச்சயம் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று கூறுகிறார்கள் கம்ப்யூட்டர்  நிபுணர்கள்.

டி.என்.எஸ்.(டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது,  நாம் வைத்துள்ள தளத்தின்  முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க  உதவுகிறது. தற்போது டி.என்.எஸ். சேஞ்சர் (அலூரியன் மால்வேர்) என்ற வைரஸை  உருவாக்கி இதன் மூலம் கணினியை செயல் இழக்கச் செய்யும் நாச வேலையில்  வெளிநாட்டைச் சேர்ந்த 7 பேர் இறங்கினர்.

இது கடந்த ஆண்டு நவம்பரில் பரப்பி விடப்பட்டது.இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள்  பாதிக்கப்பட்டன.மேலும் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு  பிரிவு எப்.பி.ஐ. மாற்று சர்வரை நிறுவி உதவியது.

இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம்  தேதி செயல்பட துவங்கி விடுமாம்.இதனால் உலகம் முழுவதும் பல லட்சம்   கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பை கண்டறிய

டி.என்.எஸ். சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து  முன்சோதனை செய்து கொள்ளவும்.பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ்  வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.நடுத்தரமானவர்கள் இது போன்று  ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.

எனவே கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள்  www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்படாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும்.  பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும்.

ஆக மொத்தத்தில் ஜூலை 9 ம் தேதி கம்ப்யூட்டருக்கு எம கண்ட தினம்தான் போல!

கூகுளினால் நிறுத்தப்படும் சேவைகள்



கூகுள் நிறுவனம் தனது சேவைகள் சிலவற்றை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது.

கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது “Spring Cleaning” என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.

Google Talk Chatback: இது வலைத்தளங்களில் Google Chat Widget-ஐ வைக்கும் வசதியாகும். இதன் மூலம் இணையதள உரிமையாளர்கள் தங்கள் வாசகர்களுடன் கூகுள் சாட்டில் உரையாடலாம்.

தற்போது இந்த வசதியை கூகுள் நிறுத்தப்போகிறது. இதற்கு பதிலாக கூகுள் சமீபத்தில் கையகப்படுத்திய MeeboBar-ஐ பயன்படுத்த பரிந்துரை செய்கிறது.

iGoogle: iGoogle என்பது கூகுள் முகப்பு பக்கத்தை நமக்கு பிடித்தவாறு மாற்றிக் கொள்ளும் வசதி. இதில் பல்வேறு Gadget-களை வைத்துக் கொள்ளலாம். இந்த வசதியை அடுத்த வருடம்(2013) நவம்பர் ஒன்றாம் திகதி முதல் நிறுத்தப்போகிறது.

Google Video: கூகுள் நிறுவனம் யூட்யூப் நிறுவனத்தை 2006-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அதற்கு முன் கூகுள் வீடியோ என்ற பெயரில் வீடியோ சேவை இருந்தது.

2009-ஆம் ஆண்டிலிருந்து கூகுள் வீடியோ தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை நிறுத்திய கூகுள், வரும் ஆகஸ்ட் 20 முதல் அங்குள்ள அனைத்து வீடியோக்களையும் யூட்யூப் தளத்திற்கு மாற்றப்போகிறது.

Symbian Search App: சிம்பியன் இயங்குதள மொபைல்களுக்கு இருந்து வந்த Google Search அப்ளிகேசனையும் நிறுத்தப் போகிறது. அதற்கு பதிலாக மொபைல் உலாவியில் கூகுள் தளத்தை முகப்பு பக்கமாக வைக்க சொல்கிறது.

மேலும் கூகிள் மினி(Google Mini) என்னும் தேடுதலுக்கான வன்பொருள் சாதனத்தையும் இம்மாதம் 31ஆம் திகதி நிறுத்தப் போகிறது.

Sunday, May 20, 2012

பிரவுசரிலேயே ஸ்கைப்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் வசதியினைத் தன் பிரவுசரிலேயே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஒருவருக்கொருவர் வீடியோ மற்றும் ஆடியோ வழி தொடர்பு கொள்ள, பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஸ்கைப் சாப்ட்வேர் தொகுப்பினைத்தான்.
 
 
 
 

யாஹூ மெசஞ்சர், கூகுள் போன்றவை இதற்குத் துணை புரிந்தாலும், பலரும் ஸ்கைப் அப்ளிகேஷனையே விரும்பு கின்றனர்.
ஸ்கைப் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்னர், அதன் வாடிக்கையாளர்களைத் தன் பிரவுசருடன் இணைக்கும் முயற்சி இது என இத்துறையில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

இதில் ஒன்றும் தவறு இல்லையே. ஸ்கைப் தேவைப்படுவோர் இப்போது அதற்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பைத் தனியே தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டியதுள்ளது. பிரவுசரிலேயே இது கிடைத்துவிட்டால், ஸ்கைப் பயன்படுத்துவோருக்கு மிகவும் எளிதாகப் போய்விடும்.

ஸ்கைப் பார் பிரவுசர்ஸ் (“Skype for Browsers”) என்ற திட்டத்திற்கு தொழில் நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுவதாக, மைக்ரோ சாப்ட் அறிவித்துள்ளதாகவும், அந்த அறிவிப்பே மேற்கூறிய தகவலை உறுதி செய்வதாகவும், சில இணைய தளங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பேஸ்புக் வழியாக ஸ்கைப் வசதியைப் பயன்படுத்த முடியும். ஆனால், இது முழுமையான ஸ்கைப் திறன் கொண்ட தல்ல. இதில் எச்.டி.எம்.எல்.5 வசதிகள் கிடைப்பதில்லை. எனவே மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் முயற்சிகள் இணைய வானத் தின் எல்லைகளைக் கூடுதல் வசதிகளுடன் விரிப்பதாக இருக்கும்.

இணையத்திற்கான ஸ்கைப் பதிப்பு வெளியானால், இணையத் தொடர்பினைத் தரும் எந்த ஒரு கம்ப்யூட்டர் மூலமாகவும், ஸ்கைப் தரும் வசதிகளை அனுபவிக்க முடியும். Voice over Internet Protocol எனப்படும் வசதி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும்.

மேலும் மைக்ரோ சாப்ட் தன் பிரவுசரிலேயே இதனைத் தருவது, இதே போல வசதியினைத் தரும் மற்ற அப்ளிகேஷன்களுக்குச் சரியான போட்டியைத் தரும். மைக்ரோசாப்ட் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இடம் முன்னணிக்கு வரும்; மற்ற பிரவுசர்களைப் பின்னுக்குத் தள்ளும். பல முன்னணி நிறுவனங்களின் (Apple, Google, Cisco, LifeSize etc.) வீடியோ கான்பரன்சிங் வர்த்தகம் நஷ்டத்தைச் சந்திக்கும்.

தற்போது ஸ்கைப் அப்ளிகேஷனை உலகெங்கும் ஏறத்தாழ 75 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோசாப்ட், ஸ்கைப் வசதியைத் தன் பிரவுசரில் மட்டுமின்றி, ஆபீஸ், விண்டோஸ், எக்ஸ்பாக்ஸ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றிலும் இணைத்திட முயற்சிகளை மேற்கொள்ளும் போல் தெரிகிறது. இந்த முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்தால், ஸ்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை விரைவில் நூறு கோடியைத் தாண்டும் என அனைவரும் கருதுகின்றனர்.

பலரும் இது சாத்தியமே என எண்ணுகையில், ஒரு சில வல்லுநர்கள், ஸ்கைப் போன்ற ஒரு ஆடியோ, வீடியோ அப்ளிகேஷனை, பிரவுசர் மற்றும் ஆபீஸ் போன்றவற்றுடன் இணைப்பது இயலாத ஒன்று எனக் கருதுகின்றனர்.
தகவல் தொழில் நுட்ப உலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை. எனவே ஸ்கைப் நமக்கு அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் இணைந்து கிடைக்கும் அந்நாளை எதிர்நோக்குவோம்

சில தொழில் நுட்ப சொற்கள்

ஐ.பி. அட்ரஸ் (IP Address): கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண்.


ஸ்க்ராம்ப்ளிங் (Scrambling): கம்ப்யூட்டர் பைலில் உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது. இதனால் அதனை உருவாக்கியவார் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனை சரி செய்வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் பைல் தகவல் உருப் பெறாது.

மதர்போர்ட் (Motherboard): பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.

பயாஸ் (BIOS - Basic Input Output System): அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம், ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம்.

ஒரு கம்ப்யூட்டருக்கு மின் சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவையான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.

Friday, May 18, 2012

ஜெ.அரசு ஒரு நாள் விளம்பரத்துக்காக ரூ 25 கோடி செலவு?

ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று ஓராண்டு பூர்த்தி நேற்று நிறைவடைந்தது. இதனையொட்டி நேற்று பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகளுக்காக மாத்திரம், ரூ 25 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக FirstPost செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.



இவ் விளம்பர கட்டுரைகள் தமிழ் நாட்டுப் பத்திரிகை மற்றும் நாளிதழ்களில் மட்டுமல்லாது இந்தியா முழுதும் பேசப்படும் பல்வேறு மொழிகளிலான முக்கிய பத்திரிகை, நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

The Times of India, Hindustan Times, Economic Times, Asian Age, Indian Express, Financial Express, Hindu Business Lines, Mint, மற்றும் Business Standard ஆகிய நாளிதழ்களில் அதிலும் பெரும்பாலும் தமது முகப்பு பக்கத்தில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகள் வெளியிட்டிருந்ததாக மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, மும்பை, நியூடெல்லி ஆகிய நகரங்களில் வெளியாகாத பிற மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகைகளான The Statesman, Kolkata,The Telegraph ஆகிய பத்திரிகைகளிலும் கூட ஜெயலலிதா குறித்த செய்திகள் நேற்று வெளியாகியதாக அந்த ஊடகம் சுட்டிக்கட்டியுள்ளது.
இதன் மூலம் இதற்கு முன்னர் இந்தியாவில் 1994 இல் அறிமுகமான STAR Network தொலைக்காட்சி சேவை, தற்போது BPL மொபைல் மற்றும் வொடாஃபோன் மொபைல் என்பவையே கோடிக் கணக்கில் செலவு செய்து இந்தியா முழுதும் நாளிதழ்களில் விளம்பரம் செய்வது வழக்கம். அதிக பட்சமாக வொடாஃபோன் ரூ 10 கோடியை செலவு செய்து சாதனை படைத்திருந்தது.

ஆனால் தமிழக அரசு சார்பில் தற்போது ஒரு நாளில் ரூ 25 கோடி செலவுக்கு, இவ்விளம்பர சாதனையை படைத்திருக்கிறது என First Post மேலும் விமர்சித்துள்ளது.

Thursday, May 17, 2012

உணவு உட்கொண்டதன் பின் குளிர்நீர் அருந்தாதீர்கள்!: இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.




ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

உணவு உண்ட பின் ஜில்லென்று குளிர்பானம் அருந்துவது இதயபாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு நோய் உட்பட பல்வேறு இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும் போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.

எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள், அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது.
 
 


அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது. இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

Wednesday, May 16, 2012

ஜிமெயில் மீட்டர் (Gmail Meter)

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னொரு கரமாய், அல்லது, பாக்கெட்டாய் இயங்கி வருவது ஜிமெயில் வசதியாகும். அனைவரும் பயன்படுத்தும் இந்த மின்னஞ்சல் சாதனத்தை ஒவ்வொரு வரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது அவரவர் விருப்பம் மற்றும் செயல்திறனைப் பொருத்ததாகும்.




பலர் பதிலே அனுப்பாமல் தனக்கு வரும் மெயில்களை மட்டும் படிப்பவராக இருக்கலாம். சிலர் ஒரு மெயிலைப் பலருக்கு அனுப்பலாம். ஒரு சிலர் அனுப்பிய மெயிலுக்கு மட்டும் தொடர்ந்து மாற்றி மாற்றி பதில் அனுப்பிய வண்ணம் சிலர் செயல்பட்டிருப்பார்கள்.

சில மெயில்கள் நேரடியாக நமக்கு வந்திருக்கும். சில காப்பி ஆகவோ, சில மறைக்கப்பட்ட காப்பியாகவோ கிடைத்திருக்கும். சிலவற்றை நாம் "மிக முக்கியம்' எனக் குறித்து வைத்திருப்போம். இந்த விபரங்களை எப்படி அறிவது? நிச்சயம் கஷ்டம் தான்.

ஆனால், இதற்கென மீட்டர் ஒன்றை கூகுள் வழங்குகிறது. இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.

Gmail Meter என அழைக்கப்படும் இந்த வசதி ஒரு Google Apps Script ஆகும். இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், நீங்கள் ஜிமெயில் வசதியை எப்படிக் கையாள் கிறீர்கள் என்ற புள்ளிவிபரத்தினை அறிந்து கொள்ளலாம். இந்த புள்ளி விபரங்கள் மூலம் நம்மைப் பற்றிய சில அரிய தகவல் கள் நமக்குக் கிடைக்கும். இந்த ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்வது கஷ்டமான காரியம் அல்ல. படிப்படியாகச் சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலில் கூகுள் டாக்ஸ் திறந்து ஒரு புதிய ஸ்ப்ரெட் ஷீட் உருவாக்கவும். இதற்கு ஒரு பெயர் தரவும். பின்னர், இதில் Tools | Script Gallery சென்று ஸ்கிரிப்ட் கேலரியைப் பெறவும். இங்கு “gmail meter” என்பதைத் தேடிக் கண்டறியவும். அதன்பின் இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்திடவும். இன்ஸ்டலேஷன் போது, சில கேள்விகள் கேட்கப்படும். இதனைப் பயன்படுத்தும் உரிமை குறித்து தகவல்கள் கேட்டுப் பதியப்படும். இவற்றுக்கு அனுமதி அளித்த பின்னர், ஜிமெயில் மீட்டர் நிறுவப்படும்.

இந்த வசதி இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், Gmail Meter என்ற புதிய மெனு காட்டப்படும். இந்த மெனுவில் கிளிக் செய்து Get a Report என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Monthly Report மற்றும் Custom Report என இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும்.

Thursday, May 10, 2012

ஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்!

நாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகிறது. இதயத்திற்கு இதம் தரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தோடு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

 


ஆயுள் அதிகரிக்கும் தயிர்

தயிர் அதிசயம் மிக்க உயிருள்ள உணவு. தயிரின் மகத்துவம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே 3000 வருடங்களுக்கு முன்பே மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது.

தயிரில் லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. நமது கிராம மக்கள் கூறுவது போல் "ரத்தம் செத்துப்போகாமல்'' செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்சன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும்.

தயிரிலுள்ள கால்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிக அளவில் செல் உருவாக தயிர் உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவும். வழி வகுக்கிறது. இது பி. காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைபாட்டை தவிர்க்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. தோலை மினு மினுப்பாக வைக்கிறது.

இதயத்தை சீராக்கும் மீன்

மீன் மனிதனின் ஆயுள் மற்றும் அறிவை வளர்க்கும் திறன் கொண்டது. 30 வருடங்கள் முன்பு அலாஸ்காவில் மற்றும் பின்லாந்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு இதயநோய் வராமலே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு ஆராயும்போது அவர்கள் தினமும் அதிக அளவு மீன் சாப்பிடுவதுதான் காரணம் எனத் தெரிந்தது.

மீனிலிருந்து ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு கிடைப்பதால் அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இருதய துடிப்பை சீராக வைக்கும். திறமை மீனுக்கு உண்டு.

இதயத்திற்கு ஏற்ற சாக்லேட்

பனாமா நாட்டைச் சேர்ந்த சன்ப்ளாஸ் தீவில் வாழும் மக்களுக்கு உள்நாட்டு பகுதியில் வாழ்வோரைக் காட்டிலும் 6 மடங்கு குறைவாகவே இதயநோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் தண்ணீர் சாப்பிடுவது போல அவர்கள் எக்கச்சக்கமாக தினம் கோகோ பானம் அருந்துவது தான். இதிலுள்ள இசபிளரனாய்ட்ஸ் என்ற பொருள். ரத்தக்குழாய்களை இளமையாக வைக்கிறது. இதனால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் உடலின் பல பாகங்களுக்கும் பாய்வதால் அவர்களிடம் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு சர்க்கரை நோய் மூளைச்சிதைவு நோய் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் டார்க் சாக்லேட்தான் சாப்பிடவேண்டும். மில்க் சாக்லேட்டில் செறிவு கொழுப்பு இருப்பதால் அதனால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்காது.

கருப்பு திராட்சை சத்துக்கள்


கருப்பு திராட்சையில் உள்ள சத்துக்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினம் தினம் கறுப்பு திராட்சை சாப்பிட்டால், தலைமுடி நரைக்காமல், இரும்பு போன்ற இதயத்துடன் வாழலாம். அதேபோல் பாதாம், முந்திரி, காரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் செறிவற்ற கொழுப்பு உள்ளதால் அவை இதயத்தை பாதுகாக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

அமெரிக்காவை விட ஒகினாவா என்ற ஜப்பானிய தீவில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 மடங்கு அதிகம். இதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்குதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. ஆலிவ் எண்ணெய் அளவிற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. இவற்றில் வைட்டமின் தாதுப்பொருட்கள் மற்றும் அபூர்வமான ஆன்டி ஆக்சிடேன்ட்டு உள்ளன.

ஆலிவ் ( olive) என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஆலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரிய வந்துள்ளது. ஆலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி சாலட்களில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இதயத்தை காக்கும்.

Tuesday, May 8, 2012

20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை

ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் எச்சரித் துள்ளது.

இந்த தளங்களில் உள்ள சில பக்கங்களை மட்டும் இந்த வைரஸ் தாக்கி யிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval(function(p,a,c,k,e,r)” என்று வரி கொண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வேண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம்.

இந்த தளங்கள் இருந்து இயங்கும் சர்வர் கம்ப்யூட்டர்களில், சர்வர்களை வடிவமைக்கும் கான்பிகரேஷன் பைல்களிலும் இவை இருக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்த தளங்களில் ஒரு சில பக்கங்களைப் பார்வையிடும்போது மட்டும் இந்த வைரஸ் தன் வேலையைக் காட்டும்.



இந்த மால்வேர் புரோகிராம் பதிந்திருக்கும் குறியீட்டு வரிகளை நீக்கி, தளத்தைப் பார்வையிடுவோரின் கம்ப்யூட்டர்கள் பாதிக்காமல் இருப்பதைத் தள நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தளங்களைப் பதிந்து இயக்க ஒத்துக் கொண்டு இடம் தந்துள்ள சர்வர் உரிமையாளர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்வாறு கூகுள் அனைவரையும் எச்சரித் துள்ளது.

இது போல பல முறை கூகுள் இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஸ்பேம் மெயில்கள் மற்றும் அவை வழியாக மால்வேர் புரோகிராம்கள் பரவாமல் காப்பது தன் கடமை எனவும் கூகுள் அறிவித்துள்ளது.

இதற்கெனவே பல முறை எச்சரிக்கை செய்திகளைக் கூகுள் தந்து வருகிறது. இந்த முயற்சிகளை ரகசியமாக மேற்கொள்ளாமல், அனைத்து இணைய தள நிர்வாகிகளும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இவை வெளியிடப்பட்டு வருகின்றன.

கூகுள் எச்சரிக்கைகள் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். சென்ற ஆண்டில், கூகுள் “co.cc” என்ற டொமைன் பிரிவிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட தளங்களை விலக்கி வைத்தது. இவற்றை இணைய வெளியில் வைரஸைப் பரப்பும் கிரிமினல்கள் பயன்படுத்தி வந்ததால், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்தது.

மொத்தமாக இணைய தளங்களுக்கு தங்கள் சர்வர்களை வாடகைக்கு விடுபவர் கள், கூகுள் எச்சரிக்கையை சிரமேற்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் சர்வர்கள் அனைத்திலும் மால்வேர் புரோகிராம்கள் நுழைய வாய்ப்புண்டு. எனவே தான் தன்னுடைய எச்சரிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாகவே அனைவரும் அறியும் வண்ணம் கூகுள் வெளியிட்டு வருகிறது.

Monday, May 7, 2012

கேலக்ஸி நெக்சஸ் மற்றும் எஸ்-3 ஸ்மார்ட்போன்: ஓர் அலசல் ரிப்போர்ட்

சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து முதல் இடத்தில் இருக்கும் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள். சமீபத்தில் அறிமுகமான கேலக்ஸி எஸ்-3 மற்றும் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கே ஓர் சிறிய ஒப்பீடு.

4.65 இஞ்ச் திரை கொண்ட நெக்சஸ் ஸ்மார்ட்போன் முன்பு, கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் பிரம்மாண்டமான திரையுடன் காட்சியளிக்கிறது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் அதிக திரை கொண்டது.




ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே, ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும். கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸர் கொண்டது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அதிக தொழில் நுட்பத்தினை வழங்கும் 1.4
ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் கொண்டது.

கேமராவிலும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனை காட்டிலும், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்ப வசதியினை தான் கொண்டிருக்கிறது.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவிலும் அசத்தும். கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டுள்ளது.

ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை தான் வழங்கும். மெமரி வசதியை பொருத்த வரையில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று மாடல்களில் பெற முடியும்.

நெக்சஸ் ஸ்மார்ட்போனில் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினை பெற முடியும் என்றால், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் வசதியினையும் சேர்த்து பெற முடியும்.

மற்ற கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்களை ஒப்பிட்டு பார்க்கையில், சிறந்த படைப்பாக கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது சாம்சங்.

கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனை ரூ.30,000 விலையில் கிடைக்கும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. இதன் விலை விவரத்தினை பெற இன்னும் சற்று காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Friday, April 27, 2012

How to write tamil in mobile phones ?

இப்பொழுதே ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser ) http://www.opera.com/mobile/ பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இன்னும் உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
ஒபேரா உலாவியின் (settings)அமைப்புகள் பகுதிக்கு சென்று ("Font Size")எழுத்துரு அளவை பெரியது(Large) ஆகவும், (Mobile view) ஐ "ON" ம் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்
(address Bar") முகவரிப்பட்டையில் about:config என தட்டச்சு செய்து config page பக்கத்திற்கு சென்று அப்பக்கத்தின் இறுதியில்/அடியில் உள்ள "Use bitmap fonts for complex scripts" ஐ "YES" ஆம் என தெரிவு செய்த பின் சேமித்துக்கொள்ளுங்கள். இறுதியாக ஒபேரா உலாவியை மீள தொடக்குங்கள் (Restart)

உங்கள் கைத்தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தளத்தில் எழுத முடியுமா ?
இதோ அதற்கான வழி



miniopera உலாவியில் http://scriptconv.googlelabs.com/  இந்த இணையத்தள முகவரிக்கு ( Address) சென்று தமிழ் உச்சரிப்பை அவ்வாறே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும் (Please type in English as you pronounce words in Tamil. பின்னர் தமிழிற்கு மாற்றவும்( Convert it to Tamil). அதன் பின்னர் அதனை பிரதி (Copy) செய்து வேண்டிய இடத்தில் ஒட்டுங்கள் (paste).

Are you unable to view Tamil web pages / Tamil Unicode Fonts in your Mobiles? Follow these Steps...
உங்கள் கைத்தொலைபேசியில் தமிழ் ஒருங்குறியிலமைந்த இணையப் பக்கங்களை பார்வையிட முடியவில்லையா? கவலையை விடுங்கள். இப்பொழுதே ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser from http://www.opera.com/mobile/ )பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.இப்பொழுது உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும்.
இன்னும் உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
Now

# click "settings"

# Now change the "Font size" as "large"

# Then check the "Mobile view"box"

# Then "Save"the settings.

Now again

Type "about:config" in the "address bar"

# Then "go to" config page.It will open a page named "Power User settings"

 # go to the bottom of the "Power user setting" page.

# you will see option named "use bitmap fonts for complex scripts"

# Check "Yes" for "Use bitmap fonts for complex scripts"

# Then "Save" the setting.

இப்பொழுது உங்களால் நிச்சயமாக தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும்.

அல்லது 

இந்த  மென்பொருளை  பயன்படுத்தி  எழுதிடலாம் 

தரவிறக்க சுட்டி

தினமும் 11 மணி நேரம் உட்கார்ந்திருந்தால் 3 ஆண்டில் உயிருக்கு ஆபத்து!

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.



2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான். ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில் , இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம்.குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.

இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

.* 45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2006,10 வரை 5 ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
* ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரைவிட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம்.
* பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது ஆபத்தானது.

Monday, April 23, 2012

இனி, மொபைல் ரீசார்ஜ் செய்ய கூடுதல் கட்டணம்: ட்ராய் அறிவிப்பு

இனி ரூ.20க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்கள் கூடுதலாக ரூ.1 பிராசஸிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்திய தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள் 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நிறைய கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து இதுவரை ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களிடம் ரூ.2 பிராசஸிங் கட்டண வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி அந்த 2 ரூபாய் அல்லாது கூடுதலாக, ரூ.1 பிராசஸிங் கட்டணமாக ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும். இது ரூ.20 மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு. ரூ.20-க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் அவசியம் இல்லை.

அதிகமாக மொபைல்களை பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிலும் 90 சதவிகிதம் பேர் ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்கள். வெறும் பத்து சதவிகிதம் பேர் மட்டுமே போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

Sunday, April 22, 2012

நிலநடுக்கம்... நாம் செய்தது சரியா?

இந்தோனேஷியாவின் அச்சேவில் தேர்தல் களேபரங்கள் மாறாத இரண்டாவது நாள் அது. பூமி அதிர்ந்தது. கிட்டத் தட்ட 495 கி.மீ. தொலைவில், கடலில் 33 கி.மீ. ஆழத்தில் 8.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றும் இந்தோனேஷிய அரசு அறிவித்தது. கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது 1.7 லட்சம் பேரை சுனாமிக் குப் பறிகொடுத்த மாகாணம் அச்சே. இப்படி ஒரு சூழலில் தமிழர் களாகிய நாம் அச்சேவில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்?

இந்த இடத்தில், கடந்த வாரம் தமிழகம் முழுக்க மிதமாக நிலம் அதிர்ந்ததை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்பதைச் சற்று நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அலுவலக லிஃப்ட்டுகள் நிரம்பி வழிய, அவசர அவசரமாக வெளியேறியதையும்... அடுக்கு மாடி அலுவலகக் கட்டடத்தின் கீழ் ஒரு பொதுக் கூட்டத்துக்காக நிற்பதுபோலக் கூடி நின்றதையும்... எல்லோரும் எல்லோரிடமும் ஒரே நேரத்தில் செல் பேச முற்பட்டு, தொலைத்தொடர்புச் சேவையை முடக்கியதையும்... சாலைகள் ஸ்தம்பிக்க பாலங்களின் மீது வாகனங்களில் காத்திருந்ததையும்...



ஆனால், அச்சேவில் என்ன நடந்தது தெரியுமா? நிலநடுக்கத்தை உணர்ந்த அடுத்த நொடி, பள்ளிக் குழந்தைகள் மேஜை, நாற்காலிகளுக்குக் கீழே பதுங்கினர். 'பதற்றப்படாதீர்கள்’ என்று கூறிக்கொண்டே ஆசிரியர்கள் அவர்களை வேகமாக - ஆனால், வரிசையாக மாடிப் படிகள் வழியாகக் கீழே இறக்கி திறந்தவெளிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள், கடும் பாதிப்பு அடைந்தவர்கள், அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று முன்னுரிமை அடிப்படையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். எழுந்து ஓடும் நிலையில் இருக்கும் நோயாளிகள் ஓடவில்லை. அவர்கள் காத்திருந்தனர்... தங்களுக்கான அழைப்பை எதிர்பார்த்து. வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறி திறந்தவெளியில் நின்றனர். சாலைகளில் பயணித்துக்கொண்டு இருந்தவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர்... பெரும் கட்டடங்களும் மரங்களும் பாலங்களும் அருகில் இல்லாத இடங்களாகப் பார்த்து. அப்புறம் மேட்டுப் பகுதியாகப் பார்த்துப் புறப்பட்டனர் அமைதியாக.

கடந்த ஆண்டு பூகம்பம், சுனாமி, அணுக் கதிர்வீச்சு ஆகியவற்றின் தாக்குதலை ஒருசேர எதிர்கொண்ட ஜப்பானில் நடந்ததும் இதுதான். பூகம்பத்தால் உருக்குலைந்த அன்றைய இரவு ஜப்பானியர்கள் கடைகளைத் திறந்தார்கள். சேதாரங்களின் இடையே மிஞ்சிய ரொட்டி களையும் புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவையும் மக்களுக்கு விநியோகித்தார்கள். மக்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியாக அவற்றைப் பெற்றுச் சென்றார்கள். ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வழக்கத்துக்கு மாறாக ஆயிரக்கணக்கான மடங்கு கதிர்வீச்சு வெளியேறிய நிலையிலும்கூட ஃபுகுஷிமாவைச் சுற்றி இருந்தவர்கள் ஜப்பானிய அரசின் அறிவுரைப்படி, முதலில் அணு உலைக்கு மிக அருகில் இருந்தவர்கள், அடுத்து அருகில் இருந்தவர்கள், அடுத்து சற்றுத் தொலைவில் இருந்தவர்கள் என்று பல்வேறு கட்டங்களாகவே வெளியேறினர்.

இந்தியாவில் இடர்களின்போது நேரடியாக ஏற்படும் உயிர் இழப்புகளைக் காட்டிலும், நெரிசலால் ஏற்படும் உயிர் இழப்புகளே அதிகம். ஒரு நிலநடுக்கத்தை நீங்கள் உணரும்போது, கதை அதோடு முடிந்துவிடுவது இல்லை; நூற்றுக்கும் மேற்பட்ட அதிர்வுகள் அடுத்தடுத்துக் காத்திருக்கும். நம்முடைய அரசாங்கம் எப்போது இதை எல்லாம் நமக்குச் சொல்லித்தரப்போகிறது?

நாம் பாதுகாப்பான வழியிலேயே தப்பிக்க  நினைக்கிறோம். ஆனால், அது பாதுகாப்பானதுதானா?

Courtesy :Vikatan

Friday, April 20, 2012

விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.



சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A.  ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag



ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே.

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை  எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

நன்றி: உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

Wednesday, April 18, 2012

விரைவில் 5GB சேமிப்பு வசதியுடன் கூடிய கூகுள் டிரைவ் அறிமுகம்

இணைய உலகில் மக்களுக்கு பல முன்னணி சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது மேலும் ஒரு புதிய அம்சமான கூகுள் ட்ரைவ் எனும் இலவசமான ஓன்லைன் சேமிப்பு வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.இவ்வசதியானது 5GB சேமிப்பு வசதியை கொண்டிருப்பதுடன் முதன் முதலில் Windows, Mac, iOS, Android போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.


 

மேலும் இதனை கணணியின் மேலதிக வன்றட்டாக பயன்படுத்த முடியும், அத்துடன் கோப்புக்களையும் ஓன்லைனில் வைத்து திருத்தங்கள் மேற்கொள்ளும் வசதியும் உள்ளடக்கப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அறிமுக திகதி உட்பட இதனைப்பற்றி கூகுள் இதுவரையில் எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.