Gmail கணக்கை வைத்திருப்பவர்களில் பலரும் விரும்புவது, தங்களது மின்னஞ்சல்களை வன் தட்டில் ஏதாவது ஒரு ஃபோல்டரில் Backup எடுத்து வைத்து கொள்வது. இப்படி பேக்கப் எடுத்து வைத்துக் கொள்வதன் மூலமாக, எப்பொழுதாவது நமது மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்படும் பொழுது, பழைய மின்னஞ்சல்களும், தொடர்புகளையாவது இழக்காமல் இருக்க முடியும.
இந்த பணியை நமக்கு எளிமையாக்குகிறது GMail Backup எனும் இலவச மென்பொருள் கருவி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இதனை திறந்து கொண்டு, உங்கள் ஜிமெயில் பயனர் பெயர், கடவு சொல் மற்றும் உங்கள் வன் தட்டில் பேக்கப் எடுத்து வைக்க வேண்டிய ஃபோல்டர் விவரம், எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை பேக்கப் எடுக்க வேண்டும் என்ற விவரம் ஆகியவற்றை கொடுத்து,
கீழே உள்ள Backup பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது அந்த குறிப்பிட்ட ஜிமெயில் கணக்கில் உள்ள மின்னஞ்சல்கள் தரவிறக்கம் செய்யப்படுவதை கவனிக்கலாம்.
அனைத்தும் முடிந்த பிறகு, நீங்கள் குறிப்பிட்டிருந்த ஃபோல்டரில் அனைத்து மின்னஞ்சல்களும் பேக்கப் ஆகியிருப்பதை பார்க்கலாம்.
இனி இவற்றை இரட்டை க்ளிக் செய்து திறக்கையில், எம்.எஸ் அவுட்லுக்கில் திறக்கும்.
அட்டாச்மெண்டுகளும் பேக்கப் எடுக்கப்படுகிறது. மேலும், ஒரு வேளை இப்படி பேக்கப் எடுத்த மின்னஞ்சல்களை உங்கள் ஜிமெயில் கணக்கில் டெலிட் செய்திருந்தால், இந்த பேக்கப்பிலிருந்து இதே கருவியைக் கொண்டு ரீஸ்டோர் செய்து கொள்ளமுடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.
0 comments:
Post a Comment