சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும்.
அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம் வழி செய்கிறது. பதிவு செய்யாமலேயே ஏற்கனவே உள்ள பயனர் கணக்குகளை கொடுத்து லாகின் செய்து கொள்ள முடியும்.
BugMeNot.com - இந்த தளத்தில் பயனர்கள் பகிர்ந்து கொண்ட பல தளங்களின் பயனர் கணக்குகள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் தளங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த தளத்திற்கு சென்று நீங்கள் வேண்டும் தளத்தின் பெயரை கொடுத்து 'Get Logins' கிளிக் செய்யவும்.
அந்த தளத்தின் பல பயனர் கணக்குகள், பாஸ்வோர்ட் பட்டியலிடப்படும். அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும். அதில் வரும் எல்லா பயனர் கணக்குகளும் வேலை செய்யும் என்று கூற முடியாது. ஆனால் சில கணக்குகள் வேலை செய்கிறது.

நீங்கள் பயர்பாக்ஸ் இணைய உலாவி உபயோகிப்பவராக இருந்தால் இந்த வசதியை மிகவும் எளிமையாக ஒரு நீட்சி (Extension) மூலம் பயன்படுத்தலாம். அந்த நீட்சியை இந்த சுட்டியில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் வேண்டும் தளத்தின் லாகின் பக்கத்திற்கு செல்லும் போது, அங்கே வலது கிளிக் செய்து கொண்டு 'Login with BugMeNot' என்பதனை தேர்ந்தெடுத்து கொள்ளவும். தானாக பயனர் கணக்கு உள்ளீடு செய்யப்படும்.
இது அனைத்து தளங்களிலும் வேலை செய்கிறதா என்றால், இல்லை. நான் ஐந்து தளங்களில் பல்வேறு பயனர் கணக்குகளை பயன்படுத்தி பார்த்தேன். மூன்று தளங்களில் சரியாக லாகின் செய்ய முடிந்தது.
0 comments:
Post a Comment