This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, May 29, 2011

Maths in Microsoft Word


நீங்கள் உபயோகிப்பது மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 என்றால் இந்த வழிமுறையை பின்பற்றவும்

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செலக்ட் செய்யவும் இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடுக்கவும் தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம் இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்



இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்

மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது திறக்கும் பாப் அப் விண்டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவுஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்களுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறதோ அங்கே இழுத்து விடவும் இப்பொழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும் கீழே உள்ள படத்தையும் பாருங்கள்.


Courtesy :PKP

இப்படியும் ஆயுதங்கள்,,,


கேள்விப்படும் கான்ஸ்பிரசி தியரிகளில் கொஞ்சமாவது உண்மை இருக்கின்றதோ இல்லையோ ஆனால் அது கொண்டுவரும் தகவல்கள் நம்மை மயிர்கூச்செறிய செய்பனவாக உள்ளன. இப்படித்தான் ஹெய்தி பூகம்பத்தை ஒட்டி உலாவந்திருக்கும் இந்த மிகப்பெரிய கான்ஸ்பிரசி தியரியும். நிலநடுக்கங்களை மனிதன் செயற்கையாக உருவாக்க முடியுமா? அவற்றை எதிரிநாடுகளுக்கு எதிராக, அல்லது ஏதோ ஒரு லாபத்துக்காக இன்னொரு நாடு மீது ஏவிவிட முடியுமா என்றால், ஒருசாரி புள்ளிகளும், விஞ்ஞானிகளும் இது சாத்தியமே என்கின்றார்கள்.

ஹார்ப் என்று அமெரிக்காவில் அறியப்படும் இந்த உயர்தொழில் நுட்பம் சீனா, ரஷ்யா உட்பட பிறநாடுகளிலும் உள்ளதாம். மிகப்பெரிய ஆண்டனாக்கள், டவர்களோடு கூடிய இந்த பெரிய செட்அப் மூலம் வான்வெளியில், வாயு மண்டலத்திற்கும் மேலிருக்கும் அயானோஸ்பியர் பகுதியிலுள்ள அயான்களை புகையச்செய்து வாயுவெளியில் துளைகளை உண்டாக்கி அதன் மூலம் பூமியில் நிலநடுக்கங்களை உண்டு பண்ண முடியும் என்கின்றார்கள். ஒலி அலைகள் நம் காது eardrum-ல் அதிர்வுகளாக மாற்றப்படுவதால், அதாவது மெக்கானிக்கல் ஆற்றலாக மாற்றப்படுவதால் தானே நம்மால் சத்தங்களை கேட்கமுடிகின்றது. பள்ளியில் அப்படித்தான் படித்ததாக நியாபகம். கோபால் சில பாட்டுக்களை உச்ச சத்தத்தில் காரில் ஓட விடும் போது காரே அதிர்வதை உணர்ந்திருக்கின்றேன். இது போல சில நம் புலங்களுக்கெட்டா மாய அலைகளை உருவாக்கி அதன் மூலம் எதிரிநாடுகளில் பூமிஅதிர்ச்சியை வரவைப்பதிலிருந்து, காலநிலைகளை தம் கட்டுக்குள் கொண்டுவருவது, அல்லது அதால கோர தட்பவெப்பநிலைகளை, ஹரிகேன், புயல், வெள்ளம் போன்றவற்றை எதிரி நாட்டில் உருவாக்குவது போன்ற செயல்களையும் செய்ய முடியுமாம். பொதுவாக பார்க்க அது ஒரு இயற்கையின் சீற்றம் போல இருந்தாலும் அது உண்மையில் மனிதனின் கட்டுபாட்டால் இயக்க வைத்ததாக இருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக இந்த சர்ச்சைகள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த உருவாக்கப்பட்ட அரோரா ELF காந்த அலைகளால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கும் மக்களின் மனநிலையைக் கூட தங்கள் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்கின்றார்கள். என்னவென்று சொல்வது, போகின்ற போக்கை. ஏற்கனவே ஜார்ஜியாவில் நடந்த பூமிஅதிர்ச்சிக்கு ரஷ்யாதான் காரணமென அதன் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தார்கள். இனி நடக்க இருக்கும் இயற்கையின் பேரழிவுகளுக்கு ஒரேயடியாக கடவுளையோ, பூமிமாதாவையோ குறை சொல்லமுடியாது போலிருக்கின்றது. இந்த பாழாப்போன மனிதன் தான் பின்னால் இருப்பான் போலிருக்கின்றது. இது குறித்ததான ஒரு முழு நீள விவரணப்படம் யூடியூபில். ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும்.
http://www.youtube.com/watch?v=Y-VMfzO94M0

தெல்லாம் இருக்கட்டும், இப்பொதைக்கு நாங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக, முழுநீள தமிழ் சினிமா படங்களை இலவசமாய் ஆன்லைனில் பார்க்க ஏதாவது வழி இருக்கின்றதா என கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட சுட்டிகள் உதவக்கூடும்.

Tuesday, May 24, 2011

இன்டர்நெட்: ஏமாறாமல் இருக்க பாதுகாப்பு வழிகள்

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது நாம் நிதானம் தவறினாலும் நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.


இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள்:

1. முன்பணம் கட்டாதீர்கள்: ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது. கடன் தீர்க்கப் பணம் தருகிறோம். பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம். இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, அதன் பின்னர் முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும்.

இதனை மிக அழகாக நியாயப்படுத்கும் வகையிலும் பல செய்திகள் தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான் அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப்படுத்திவிடுவதே நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.

2. அக்கவுண்ட் எண்: மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால் உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான். பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.

3. தானாக தனி நபர் தகவல்: ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.

4.போலி பேஸ்புக் செய்திகள்: பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் – அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார். நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.

5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்: இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.

6. பாதுகாப்பு வழிகளைக் கடைப்பிடியுங்கள்: இந்த மலரில் பல முறை ஆன்லைன் வர்த்தகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை எழுதி வந்திருக்கிறோம். அவற்றை அவசியம் கடைப்பிடிக்கவும். இணையத்தில் எப்போதும் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற எச்சரிக்கையுடனேயே அதனை அணுகினால், நிச்சயம் நீங்கள் பலியாக மாட்டீர்கள்.

Monday, May 23, 2011

நாசாவைப் பார்க்கலாம் - NASA Pictures





அமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா-National Aeronautics and Space Administration (NASA).நம்மூரின் ISRO போல.1958-ல் தான் நிறுவப்பட்டது.ஜூலை 1969-ல் அப்பொல்லோ 11 வழி நிலவுக்கே ஆள் அனுப்பிவிட்டார்கள்.பின்னர் இது ஒரு சுத்த கதை என ஒரு சாரார் கூற நாசா அதை மறுத்து தலையில் சத்தியம் அடித்து உண்மையென்று கூறிவருகிறது.படத்தில் இருப்பவர் தான் அந்த ஹீரோ நீல் ஆம்ஸ்ட்ராங்க்.இன்றைய அளவில் நாஸாவின் வருடாந்திர பட்ஜெட் ஏறக்குறைய 17 பில்லியன் டாலர்கள்.தலைமையகம் வாசிங்டன் டிசி-யிலுள்ளது.







Sunday, May 22, 2011

கணிணி பவர் ஆப் மேட் ஈஸி





















உங்கள் கணிணியை தானாகவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பவர் ஆப் செய்ய வேண்டுமா?.
இதோ ஒரு சிறு இலவச மென்பொருள்.சமயத்தை குறித்து விட்டால் போதும்.
சரியான நேரத்தில் அதுவே உங்கள் கணிணியை Shutdown,Logoff அல்லது Hybernate செய்துவிடும்.
இனி இசை கேட்டு கொண்டே தூங்கிவிடலாம் அல்லது படம் பார்த்தவாறே தூங்கிவிடலாம். :)

Product Page
http://users.pandora.be/jbosman/poweroff/poweroff.htm

Direct Download Link
http://users.pandora.be/jbosman/pwroff30.zip

Automatic Scheduled Computer Switchoff Poweroff Reboot Freeware Utility

courtesy: PKP 

அழிக்க அன்லாக்கர்

எனக்கு தெரிந்தவரை ஆக்குதல் தான் ரொம்பவும் கடினம். அழித்தல் மிக எளிது. ஆனால் சில சமயங்களில் கணிணி உலகு அப்படி இருப்பதல்ல. சில கோப்புகளை அழிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். Cannot delete file: Access is denied அல்லது The source or destination file may be in use அல்லது There has been a sharing violation போன்ற வார்த்தைகளால் நச்சல் கொடுக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் அக்குறிப்பிட்ட கோப்பானது அச்சமயத்தில் இன்னொரு பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்திருப்பதால் அழிக்கமுடியாதிருந்திருக்கலாம். இது போன்ற சமயங்களில் உதவ வருவது தான் Unlocker எனும் மென்பொருள். இந்த இலவச மென்பொருள் அக்கோப்புகளை அது மாதிரி பணிகளிலிருந்து விடுவிப்பதால் அழிக்கமுடியா கோப்புகளையும் எளிதாக அழிக்கலாம். தேவைப்படும்போது முயன்று பாருங்கள்.




Product Homepage
http://ccollomb.free.fr/unlocker/

Download Link
http://ccollomb.free.fr/unlocker/unlocker1.8.5.exe

1. Simply right click the folder or file and select Unlocker
2. If the folder or file is locked, a window listing of lockers will appear
3. Simply click Unlock All and you are done!
4. Now you can delete the file.

ஏய் தோழா! முன்னால் வாடா!


உயிர் காப்பான் தோழன் என முன்பு சொல்லி வைத்தார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது . ஆனால் கார்ப்பரேட் உலகில், வானளாவ உயர்ந்திருக்கும் அநேக கார்ப்பரேட்களுக்கு உயிர் கொடுத்தது தோழர்கள் தாம் என்றால் அது மிகையாகாது. இன்றைக்கு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் அநேக கார்ப்பரேட்களின் ஆரம்ப காலத்தை திரும்பிப்பார்த்தால் இரு தோழர்களின் விடா முயற்சி இருந்திருக்கும்.

மென்பொருள் ஜையண்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவ பில்கேட்ஸுக்கு பால் ஆலன் உறுதுணையாய் இருந்தார். (Microsoft-Bill Gates and Paul Allen)











நம் எல்லாருக்கும் அபிமானமான கூகுள் தேடு பொறியை உருவாக்கியதில் நண்பர்கள் லேரி பேஜ்க்கும் செர்ஜி ப்ரின்-குக்கும் பங்கு உண்டு. (Google-Larry Page and Sergey Brin)










போர்ட்டல் மன்னன் யாகூ உருவாக ஜெர்ரி யாங்-கும் டேவிட் பிலோவும் கூட்டு சேர வேண்டியிருந்தது. (Yahoo-Jerry Yang and David Filo)

டேட்டாபேஸ் புகழ் ஆரக்கிளை உருவாக்க லேரி எலிஸன், பாப் மைனர் என இருவர் தேவைப்பட்டார்கள். (Oracle-Larry Ellison and Bob Minor)








சிறுசுகளை விளாசிக்கொண்டிருக்கும் இன்றைய ஹீரோ மைஸ்பேசை உருவாக்க தாமஸ் ஆண்டர்சனும் கிறிஸ்டோபர் டிவோல்பும் இணைந்து உழைத்தார்கள். (Myspace-Thomas Anderson and Christopher DeWolfe)









இளசுகளை இசையால் மயக்கும் ஐபாட் உருவாக்கிய முண்ணணி நிறுவனமான ஆப்பிளை உருவாக்க ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு ஆரம்பகாலத்தில் இன்னொரு ஸ்டீவ் துணையாய் உடனிருந்தார். (Apple-Steve Jobs and Steve Wozniak)














ஏன்? வன்பொருள் வித்துவான் கார்டன் மூர்-க்கு கூட இண்டெலை நிறுவ நண்பன் ராபட் நோய்ஸ்-ன் உதவி தேவையாய் இருந்தது. (Intel-Gordon Moore and Robert Noyce)

Single Founder கம்பெனிகளை விட இது மாதிரி Co-Founder சகிதம் வந்து கலக்கிய கம்பெனிகளே அதிகம் போல் தெரிகின்றது.

தனியே, தன்னம் தனியே சாதிப்பதை விட இருவராய் அல்லது சிறு குழுவாய் அதிகம் சாதிக்கலாம் என இவர்கள் எடுத்துக்கூறுகின்றார்கள். நம்மூரில் கூட இன்போஸிஸ், சன் டிவி நெட்வொர்க் போன்ற பல வளர்ந்த நிறுவனங்களின் வரலாற்றை திருப்பி பார்த்தால் கடுமையாய் உழைத்த இருவர் அல்லது ஒரு குழு கண்ணில் அகப்படும்.

அழிக்கப்பட்ட போட்டோக்கள் MP3 களை மீட்க


உங்கள் கணிணியின் C டிரைவிலும் D டிரைவிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள விலைமதிப்பற்ற வீடியோ ஆடியோ கோப்புகள் , மென்புத்தகங்கள், குடும்பமாய் எடுத்துக்கொண்ட டிஜிட்டல் போட்டோ படங்கள் மற்றும் வீடியோக்கள் இவற்றையெல்லாம் அவ்வப்போது பேக்கப் (Backup) எடுத்து வைத்துக்கொள்ளல் ஒரு நல்ல பழக்கம். எப்போது ஹார்ட் டிரைவுகள் மூச்சைவிடும் எனத் தெரியாது. டிஜிட்டல் போட்டோக்களின் பெருக்கத்தால் காகித போட்டோ ஆல்பங்களின் பயன்பாடு குறைந்து வருகின்றன. அதனால் நொடிப்பொழுதில் மொத்தத்தையும் இழக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

எனவே அவ்வப்போது ஒரு DVD யில் அவற்றை எரித்து வைக்கலாம். அல்லது இப்போதெல்லாம் மிகக் குறைந்த விலையில் வரும் 500Gig, 1 Tera Usb based External Harddrive களில் அவ்வப்போது சேமித்து வைக்கலாம். (Western Digital -லின் My Book கொஞ்சம் கனமாய் தெரிகின்றது. LaCie யின் external hard drives ரொம்ப கியூட். ). அல்லது பல நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் ஸ்டோரேஜிலும் சேமித்து வைக்கலாம். போட்டோக்களுக்கு கூகிளின் பிக்காஸா ஆல்பம் மை பேவரைட். கூகிள் சீக்கிரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கும் கூகிள்டிரைவுக்காகவும் ஆர்வமாக வெயிட்டிங்.


டிஜிட்டல் கேமராவின் Memory Card-ல் இருந்த போட்டோவை தவறுதலாக அழித்தால் மீட்பது எப்படி? iPod போன்ற MP3 பிளயரிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்பது எப்படி?

இதோ இங்கு ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Recuva .It does it all.

Product Home Page
http://www.recuva.com   or go direct to download   http://www.filehippo.com/download_recuva

குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எப்போதாவது யாருக்காவது உதவலாம்.

It recovers deleted digital photos from Camera memory cards and MP3 files from iPod music player.

கைப்பேசியிலிருந்து கணிணிக்கு





ஒரு காலத்தில் கேமரா தயாரிப்பில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டு இன்றைக்கு உலகில் அதிக அளவு கேமராக்களை தயாரித்து உலகில் உலவ
விட்டுக்கொண்டிருக்கிறது "கைப்பேசி நிறுவனம்" நோக்கியா. முன்பெல்லாம் சுற்றுலா செல்லும் போதும் முக்கிய நிகழ்வுகளிலும் மட்டுமே தேடப்படும் கேமராக்கள் இப்போது எல்லாருடைய கையிலும் எல்லா நிமிடமும் செல்போன் வடிவில். தெருவில் தான் கண்ட கண்கொளா காட்சியை பிறருக்கும் காட்ட படங்களை கிளிக்குகிறார்கள். வீடியோக்களை பிடிக்கின்றார்கள்.

பொக்கைவாயில் சிரிக்கும் உங்கள் மழலையில் அபூர்வ சிரிப்பு ஒன்றை மொபைல் போனில் கிளிக்கி படமாய் எடுத்து விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை உங்கள் செல்போனில் வால்பேப்பராயும் ஆக்கி விட்டீர்கள். அந்த அபூர்வ படத்தை மடிக்கணிணிக்கு கொண்டுவருவது எப்படி?

அவசரமாய் கொண்டு வர உங்கள் செல்போன் வழி இணையத்தில் நுழைந்து அப்படத்தை உங்கள் ஈமெயில் ஐடிக்கு மின்னஞ்சல் செய்யலாம் . அப்புறமாய் உங்கள் மடிக்கணிணியில் நுழைந்து மின்னஞ்சல் வழி இறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆனால் அடிக்கடி MP3 கோப்புகள், ரிங் டோன்கள், படங்கள், வீடியோக்கள் என இன்னும் பிற
கோப்புகளை செல்போன் டு கணிணி மற்றும் கணிணி டு செல்போன் பறிமாற்றம் செய்ய உங்களுக்கு தேவை கீழ்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்று.

1.Laptop comes with Bluetooth or
2.Laptop comes with Infrared (IrDA) or
3.USB Bluetooth or (படம்) ($10 க்குள் கிடைக்கிறது)
4.USB Infrared (IrDA) or (படம்)($10 க்குள் கிடைக்கிறது)
5.USB Data Cable (படம்)

மேலும் இதன் மூலம் உங்கள் செல்போனை மோடம் (Cellphone as modem) போல் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் மடிக்கணிணி வழி இணையத்தில் நுழையலாம்.

இரு உபயோகமான மென்பொருள்கள்
If you use Bluetooth to connect Cellphone to Computer use this free software BlueSoleil to transfer files from/to mobiles phones.
Download Page
http://www.bluesoleil.com/download/

If you use USB Data Cable
floAt`s Mobile Agent- A free software to install on computer to manage Phonebook (both SIM and Phonememory), SMS, Profiles, and Files stored on the Mobile phone.
Home Page
http://fma.sourceforge.net/index2.htm

Download Page
http://sourceforge.net/project/showfiles.php?group_id=71167

ஆப்பிளின் ஐபேட் (IPAD)


தகவல் தொடர்பு உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் எப்போதும் புரட்சியை உண்டு பண்ணும் விதம் வெளிவந்திருக்கின்றன. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமே ஆப்பிள் மேக் இயங்குதளங்களை காப்பி அடித்து வந்தவைதான்.

இப்படியெல்லாம் வசதி அளிக்க முடியுமா? என்று எதிர்பாரா வசதிகளுடன் பயனர்களை மகிழ்விப்பதில் ஆப்பிள் நிறுவனம் கில்லாடி. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆப்பிள் ஒரு முன்னோடி. உதாரணத்திற்கு ஐபோன் எடுத்து கொள்ளுங்கள்.

ஐபோன் வருவதற்கு முன்பு மொபைல் சந்தை எப்படி இருந்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தொடுதிரை மொபைல் என்பது கனவுதான். ஆனால் ஐபோன் வந்த பின்பு எத்தனை நிறுவனங்கள் வகை வகையான தொடுதிரை மொபைல்களை போட்டு தாக்கி வருகின்றன. மொபைல் போன் சந்தையில் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியது ஐபோன் என்றால் அது மிகையாகாது.  ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துவது அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப் படுகிறது.

மடிக்கணினிக்கும், மொபைல் போன்களுக்கும் இடையில் எளிதாக எங்கும் எடுத்து செல்லும் எளிமையுடன் நெட்புக் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் சிறிய திரைகளுடன் கூடிய நெட்புக் கணினிகளை வெளியிடத் துவங்கி உள்ளன.

கூகிள் நிறுவனமும் தனது புதிய இயங்குதளமான குரோம் ஓஎஸ் ஆரம்பத்தில் நெட்புக் கணினிகளுக்காகத்தான் வெளியிடுகிறது. இவை நேட்புக் கணினிகளுக்கான சந்தை எதிர்காலத்தில் அதிகம் இருப்பதை உணர்த்துகிறது.

இந்த சந்தையையும் தனது வித்தியாசமான தயாரிப்பு மூலம் கலக்கப் போகிறது ஆப்பிள். நேற்று (ஜனவரி 27, 2010) ஐபேட் (IPad) எனும் தனது புதிய தயாரிப்பை உலகுக்கு தந்துள்ளது.  தோற்றத்தில் பெரிய ஐபோன் போன்று இருக்கும் ஐபேட் 9.5 இன்ச் தொடுதிரையுடன் வருகிறது. இது Wi-Fi, Wi-Fi + 3G என்று இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டு உள்ளது.

அரை அங்குல தடிமனுடன், .68 kg எடையுடன் வரும் ஐபேட்தில் இணையத்தில் உலவுதல், இசை கேட்டல், வீடியோ பார்த்தல், ஈபுக் (Ebook) வாசித்தல் போன்ற வேலைகளை எளிமையாக செய்து கொள்ள முடியும். தொடுதிரை உள்ளதால் மற்ற கணினிகளை உபயோகிப்பதை விட ஐபேட்டை உபயோகிப்பது மிகவும் எளிது.

ஐபேட் இயங்குதளம், ஐபோனின் இயங்குதளத்தை ஒத்ததாகவே உள்ளது. செயல்முறைகள் பெரும்பாலும் ஐபோனே போன்றே உள்ளன. இது ஆப்பிளின் 1Ghz பிராசசரில் இயங்குகிறது. இதன் முழுமையான தொழிநுட்ப விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்கு செல்லுங்கள். இதன் பயன்பாடுகள் குறித்து வீடியோவை பாருங்கள்.


வீடியோ 2. வீடியோ 3. மேலும் வீடியோக்கள் யூடியுபில் குவிந்து உள்ளன.

இந்த ஐபேட் மக்களை எந்த அளவு கவரும்?  கவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எடை குறைவு. எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்து செல்ல முடியும். தொடுதிரை. எளிதில் உபயோகிக்கலாம். மடியில் வைத்துக்கொண்டு புத்தகம் போல வாசித்து கொள்ளலாம். காலத்தின் வளர்ச்சியில் பெரும்பாலான மாணவர்கள் கையில் சிலேட் போன்று ஐபேட் மாதிரியான சாதனங்கள் உட்காரும் காலம் வரலாம்.

ஐபேட்டில் உள்ள குறைகளை பார்க்கலாமே. மல்டிடாஸ்கிங் (Multitaking) கிடையாது. ஒரே நேரத்தில் பல செயலிகளில் (Application) வேலை செய்ய இயலாது. வெப்கேம் இல்லாததால் வீடியோ சாட்டின் செய்ய இயலாது. 3G மாடலாக வந்தாலும் அதை நீங்கள் இணைய இணைப்புக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியுமே தரவிற போன் அழைப்புகள் (Phone Calls), குறுஞ்செய்தி (SMS) சேவை முதலியவற்றை பயன்படுத்த இயலாது.

நேரடியாக USB க்களை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது, அதற்கென தனியே அடாப்டர் தேவைப்படும். Flash சப்போர்ட் கிடையாது. இணையதளங்களில் உள்ள பிளாஷ் பகுதிகள் தெரியாது. புரியும்படி கூற வேண்டும் என்றால் இணையப்பக்கங்களில் உள்ள Flash வீடியோக்களை பார்க்க இயலாது. 16GB, 32GB, 64GB போன்ற அளவுகளில் கிடைக்கிறது. இருந்தாலும் நீங்கள் தனியே மெமரி கார்ட் வாங்கி இதனை மேம்படுத்தி (Upgrade) கொள்ள முடியாது.

ஐபேட்டின் இயங்குதளம் ஐபோன் போன்று கட்டுப்பாடுகளை உடையது. அவற்றிற்கு யார் புதிய செயலிகளை வெளியிட்டாலும் ஆப்பிள் அனுமதித்தால் மட்டுமே அவற்றை ஐபேட்டில் பயன்படுத்த முடியும். ஐபோனுக்கான கூகுளின் அருமையான பல செயலிகளை (Applications) ஆப்பிள் மட்டுறுத்தியிருக்கிறது.

எனவே ஆப்பிள் என்ன தருகிறார்களோ அவற்றை தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மற்ற கணினிகள் போன்று பிறர் செயலிகளை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது. உதாரணத்திற்கு நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் (Microsoft Word), பயர்பாக்ஸ் விரும்புபவர் என்றால் அதனை ஐபேட்டில் உபயோகிப்பதற்கான வாய்ப்பு கிடையாது.

விலையைப் பொறுத்தவரை மிகவும் அதிகம் இல்லை. Wifi மாடல் 499 டாலரில் இருந்தும், 3G+Wifi மாடல் 629 டாலரில் இருந்தும் கிடைக்கிறது. ஐபோன்களின் அறிமுக விலையை ஒப்பிடும் போது ஐபேட்டின் விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

மொத்தத்தில் ஆப்பிளின் ஐபேட் புதுமையான, கவர்ச்சிகரமான தயாரிப்பாக வந்துள்ளது. ஆனால் சூப்பர் என்று கொண்டாடுவதற்கு குறைகள் இன்றி இல்லை. இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்தால் நாம் கூறிய குறைகள் அற்ற ஐபேட் போன்ற புதிய தயாரிப்புகள் கூகிள், நோக்கியா போன்ற நிறுவனங்களிடம் இருந்து வரலாம்.  அதற்குள் ஐபேட் சந்தையை ஆக்ரமித்து கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.
 
Content from : தொழில்நுட்ப்பம்

இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க

சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும்.

அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம் வழி செய்கிறது. பதிவு செய்யாமலேயே ஏற்கனவே உள்ள பயனர் கணக்குகளை கொடுத்து லாகின் செய்து கொள்ள முடியும்.

BugMeNot.com - இந்த தளத்தில் பயனர்கள் பகிர்ந்து கொண்ட பல தளங்களின் பயனர் கணக்குகள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் தளங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த தளத்திற்கு சென்று நீங்கள் வேண்டும் தளத்தின் பெயரை கொடுத்து 'Get Logins' கிளிக் செய்யவும்.

அந்த தளத்தின் பல பயனர் கணக்குகள், பாஸ்வோர்ட் பட்டியலிடப்படும். அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும். அதில் வரும் எல்லா பயனர் கணக்குகளும் வேலை செய்யும் என்று கூற முடியாது. ஆனால் சில கணக்குகள் வேலை செய்கிறது.


நீங்கள் பயர்பாக்ஸ் இணைய உலாவி உபயோகிப்பவராக இருந்தால் இந்த வசதியை மிகவும் எளிமையாக ஒரு நீட்சி (Extension) மூலம் பயன்படுத்தலாம். அந்த நீட்சியை இந்த சுட்டியில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் வேண்டும் தளத்தின் லாகின் பக்கத்திற்கு செல்லும் போது, அங்கே வலது கிளிக் செய்து கொண்டு 'Login with BugMeNot' என்பதனை தேர்ந்தெடுத்து கொள்ளவும். தானாக பயனர் கணக்கு உள்ளீடு செய்யப்படும்.

இது அனைத்து தளங்களிலும் வேலை செய்கிறதா என்றால், இல்லை.  நான் ஐந்து தளங்களில் பல்வேறு பயனர் கணக்குகளை பயன்படுத்தி பார்த்தேன். மூன்று தளங்களில் சரியாக லாகின் செய்ய முடிந்தது.

Saturday, May 21, 2011

அண்ட்ராய்டில் கைப்பேசியில் தமிழ் புத்தகங்கள்


அண்ட்ராயிடு கைப்பேசியில் பொன்னியின் செல்வன்
Ponniyin Selvan Android Application
Download


அண்ட்ராயிடு கைப்பேசியில் திருக்குறள்

Thirukkural Android Application
Download


அண்ட்ராயிடு கைப்பேசியில் சித்தர் புலம்பல்
Sitthar Pulambal Tamil application random couplet from Bhadragiriyar Meignana Pulambal
Download


அண்ட்ராயிடு கைப்பேசியில் பைபிள்
Tamil Bible Android Application
Download


அண்ட்ராயிடு கைப்பேசியில் குரான்
Tamil Quran Android Application
Download


அண்ட்ராயிடு கைப்பேசியில் ஆத்திச்சூடி
Aathichudi Quran Android Application
Download


அண்ட்ராயிடு கைப்பேசியில் ஈநூல் பத்திரிகை
eNool First e-Zine in Tamil on Android mobile platform.
Download


அண்ட்ராயிடு கைப்பேசியில் ”ஐ” பத்திரிகை
"i Tamil Book" Android App magazine
Download

சில எஞ்சினியரிங் அனிமேசன்கள்

இங்கே சில எஞ்சினியரிங் அனிமேசன்கள் என் சேகரிப்புக்காக.
Radial Engine Used In Aircraft

Oval Regulation

Sewing Machine

Malta Cross Movement - Controls Second Hand In A Clock

Automotive Transmission - Change File Mechanism

Automotive - Constant Velocity Universal Joint

Gun Ammunition Loading System


Internal Combustion Rotary Engine

Flat Opposed 4 Cylinder Engine (not an inline engine)

2 Stroke Engine & Expansion Chamber.


Napier Deltic engine

Opposed Piston 2 Stroke Diesel
 

Courtesy :PKP.in