ஐபோன்களுக்கு அடுத்தபடியாக முன்நிலையில் காணப்படும் ஸ்மார்ட் போன்களில் மேலும் ஒரு புதிய கைப்பேசி அறிமுகமாகியுள்ளது.SH-06D என்ற பெயருடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த கைப்பேசியின் திரைகள் மிகத்துல்லியமாக படங்களை காட்டக்கூடியன.
இவை அன்ரோயிட் 2.3 இயங்குதளத்தின் அடிப்படையில் செயற்படுவதுடன் தொடுதிரை வசதியையும் கொண்டுள்ளன.அத்துடன் வழமையான கைப்பேசிகளின் icons, widgets, wallpaper போன்றவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது.
இக்கைப்பேசியின் திரையானது 4.5 அங்குல அளவுடையதும், உயர் பிரிதிறனை உடையதுமான 3D MAGI display ஐக் கொண்டுள்ளது.மேலும் 1.2GHz dual-core புரோசசர், 512MB பிரதான நினைவகம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment