Wednesday, December 28, 2011

Website Tamil Conversion Software

நம்மில் பெரும்பாலோனோர் தங்களது தாய்மொழியும் அத்துடன் ஆங்கிலம் மட்டுமே எழுதப்படிக்க தெரிந்துள்ளோம். ஆனால் ஒரு சில மொழிகளை மற்றவர்கள் பேசும் பொழுது நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இன்றைய இணைய உலகில் பல மொழிகளிலும் தரமான வலைப்பக்கங்கள் விரவிக் கிடக்கின்றன. நமது தாய்மொழி  அல்லது நம்மால் படிக்க தெரிந்த மொழி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நம்மால் வலைப்பக்கங்களில் படிக்க முடிகிறது. 


ஆனால் பெரும்பாலான ஆங்கிலம் தவிர்த்த வலைப்பக்கங்கள் Transliteration முறையிலேயே குறிப்பிட்ட மொழிகளில் உருவாக்கப்படுகின்றன. இப்படியாக உள்ள பல பயனுள்ள வேற்றுமொழி (மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு...) வலைப்பக்கங்களை எளிதாக படிக்க நெருப்பு நரி உலாவிக்கான ஒரு பயனுள்ள நீட்சி உங்களுக்காக.. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 

இந்த நீட்சி உங்களுக்கு எப்படி உதவப் போகிறது என்பதை பார்க்கலாம். உதாரணமாக உங்களுக்கு மலையாள மொழியின் வார்த்தைகளுக்கான பொருள் உங்களுக்கு தெரியும். மற்றவர்கள் அம்மொழியில் பேசும் பொழுது உங்களால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் மலையாளம் படிக்க வராது என்று வைத்துக் கொள்வோம். மலையாளத்தில் உள்ள வலைப்பக்கத்தை Transliteration முறையில் தமிழில் மாற்றிக்கொண்டால் அதை எளிதாக படித்துக் கொள்ள இயலும். இதைத்தான் இந்த NHM IndicTransliterator நீட்சி செய்கிறது. 



இந்த நீட்சி தற்பொழுது Tamil, Telugu, Hindi, Kannada, Malayalam, Diacritic, Roman ஆகிய 7 மொழிகளில் சிறப்பாக வேலை செய்கிறது. இந்த நீட்சியை கீழே உள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கி உங்கள் நெருப்புநரி உலாவியில் நிறுவிக்கொள்ளும் பொழுது, வரும் பிழைச்செய்தியில் Add to FireFox பொத்தானை க்ளிக் செய்து நிறுவிய பிறகு உலாவியை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும்.


இந்த நீட்சிக்கான விளக்கத்தை மலையாள வலைபக்கத்தில் இயக்கி பார்க்கலாம் (பிற மொழிகளில் எதுவும் சரியாக தெரியாது.. ஹி.. ஹி! ) நான் இதை சோதித்துப் பார்க்க www.mangalam.com என்ற மலையாள பத்திரிக்கையின் வலைபக்கத்தை திறந்துள்ளேன்.


இந்த பக்கத்தில் ஏதாவது டெக்ஸ்டின் மீது மவுசின் வலது பட்டனை க்ளிக் செய்து, திறக்கும் Context menu வில், NHM Transliterator -> Malayalam to -> Tamil என்பதை க்ளிக் செய்யுங்கள்.



அவ்வளவுதான் இனி ஒரு சில நொடிகளில் மொழிமாற்றத்தை திரையில் காணலாம்.



இதே போன்று பிறமொழி தளங்களிலும் செய்து பயன் பெறலாம்.


சரி இந்த வழியில் நமது தமிழ் வலைப்பூக்களை பிறமொழியில் கண்டால் எப்படி இருக்கும்.. முயற்சித்துப் பாருங்கள்.




0 comments:

Post a Comment