நாளைய உலகில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்த போவதில் மின்சாரமும் ஒன்றே. மின்சாரம் இன்றி எந்த செயற்பாடும் இல்லை என்ற நிலையிலேயே இன்றைய உலகம் நகருகின்றது.
இதற்கான தீர்வு தான் என்ன?
மின்சாரம் இன்றியும் வெளிச்சத்தை உருவாக்கலாம் என்பதை இச் செய்தி சிறப்பம்சம்.
அது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- இரும்பு நெளி தாள்கள்
- PET போத்தல்கள்
- குளோரின் கலங்கப்பட்ட நீர்
செய்முறை விளக்கம்
1. உலோகத் கூரை தாளினை 9 10 என்னும் அளவில் வெட்டி எடுக்கவும்.
2. கூரை தகட்டின் மேல் 2மில்லிமீற்றர் சுற்றளவுள்ள வட்ட வடிவில் வெட்டவும்.
3. வட்ட வடிவில் வெட்டி எடுத்ததன் பின்னர் சிறு சிறு வளைவுகளை ஏற்படுத்தவும் (மேலதிக விளக்கத்திற்கு வீடியோ பார்க்கவும்)
பின்னர் வெற்று போத்திலினை எடுத்து இருப்பு தாள் அல்லது பிரசினால் நன்றாக தேய்கவும். (அப்போது தான் பசை நன்றாக ஒட்டிக் கொள்ளும்.)
4. வெட்டி வைத்த கூரை தாளில் இப் போத்திலினை செருகவும். பின்னர் துவாரங்களுக்கு பசையிட்டு நன்றாக ஒட்டவும்.
5. வெற்று போத்தல் முழுவதும் நீரினால் நிரம்பவும். அதனுள் 10 மில்லி லீற்றல் அளவுள்ள குளோரின் சேர்க்கவும்.
6. போத்தலின் சுற்றவுக்கு உங்கள் வீட்டுக் கூரையில் துளையிடவும்.
7.கூரையில் வெட்டி எடுக்கப்பட்ட துளையில் உங்கள் போத்தல் மின்குமிலினை செலுத்தி வெளிச்சம் புகாதவாறு பசையிட்டு ஒட்டவும்.
இப்போது என்ன ஆச்சரியம் மின்சாரம் இன்றியே உங்கள் வீடு பிரகாசமாக இருக்கும்.
|
0 comments:
Post a Comment